பக்கம்:பூவும் கனியும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



சுவடிகளையும் நூல்களையும் வெளிக் கொணர வேண் டும். பயிற்சி பெற்று அதனைப் பாழாக்கிவிட்டால் என்ன பயன்? எங்கள் முயற்சி வீண், உங்களுடைய காலம் விண்; பணம் வீண்; அப்படி இல்லாமல் மேலும் மேலும் நூல்களை உருவாக்க வேண்டும்.

முதியோர் கல்வி பரவ வழி

நூல்கள் வெளியிடுவதுமட்டும் போதாது. முதியோர் கல்வியும் பரவுதல் வேண்டும். 'இளைஞருக்கே படிப்புச் சொல்லிக்கொடுக்க முடியவில்லையே, முதி யோர் கல்விக்குப் பணத்துக்கு எங்கே போவது, எத்தனை கோடி சம்பாதிப்பது' என்று கணக்குப் போட்டால், அப்படித்தான் கணக்குப் போட முடியும். ரூபாய்க் கணக்குத் தேவையில்லை. ஏதோ 15 நாள் 20 நாள் கிராமப்புறங்களிலோ அல்லது நகரங்களிலோ தங்கியிருந்து ஓய்வுக் காலங்களிலே 4 பேருக்காவது சொல்லிக்கொடுக்கின்ற முயற்சியில் ஈடுபட்டால்தான் நாம் முன்னேற முடியும். எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்' என்று எதிர்பார்ப்பது தலைகீழ்ப் பாடமாகத்தான் முடியும்.

முதியோர் கல்வி மற்ற நாடுகளில் எப்படிப் பரவியது என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். முதியோர் கல்வியில் முன்னணியில் நிற்பதாக ஸ்காண்டிநேவியன் நாடுகளைத்தான் கூறுவார்கள்.

— 46 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/52&oldid=493024" இலிருந்து மீள்விக்கப்பட்டது