பக்கம்:பூவும் கனியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



என்பதை யன்றோ அது காட்டுகிறது? மேலும், நமது இந்தியா தருமத்திற்குப் பெயர்போன நாடு. ஏதாவது தருமம் செய்துகொண்டே இருக்கும் நாடு. ஆனால் புதிய முறையிலே, காலத்திற்குத் தேவையான வகையிலே, தேசத்திற்கு இன்றியமையாத நிலையிலே, அறம்செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த முதியோர் கல்வித் தானத்திற்காகத் தங்கள் பொருளை, உழைப்பை, முயற்சியைத் திருப்பிவிட்டால், வெற்றி விரைவிலே கிடைக்கும். ஸ்காண்டிநேவியன் நாட்டிலேமட்டு மன்று, இங்கிலாந்திலும் முதியோர் கல்வி பரவிய முறையும் இதுபோலத் தான். இங்கிலாந்தில் உள்ள முதியோர் பள்ளிகள் ஆட்சியாளரால் - அரசியலாரால் ஏற்படுத்தப்பட்டவை யல்ல. எந்த நாட்டிலும்-எங்த ஆட்சியிலும் புது முயற்சிகள் எல்லாம் நம்பிக்கையுடைய, பிடிவாதம் உடைய ஒரு சிலரால்தான் தொடங்கப்பெற்று நடைபெற்றன.

இந்த இலக்கியப் பண்ணையிலே இவ்வளவு விளையும் என்று தெரிந்து, அரசியலாரும் பொதுப் பணத்துக்குப் பொறுப்பாக உள்ளவரும் ஓரளவுக்குச் செலவு செய்யமுடியுமே தவிரப் புது முயற்சியிலேயே ஏராளமாகப் பொதுப் பணத்தை எடுத்து விருப்பப்படி செலவு செய்துவிட முடியாது. இங்கிலாந்திலே சட்டத்தாலோ, அரசியலாரின் செலவினாலோ முதியோர் கல்வி பரவவில்லை. ஆனால்

— 48 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/54&oldid=493026" இலிருந்து மீள்விக்கப்பட்டது