பக்கம்:பூவும் கனியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதியோர் கல்வி—வழியும் வகையும்



தெளிவான அறிவு படைத்த ஒரு சிலரின் விடாமுயற் சியாலே-உழைப்பினாலே அங்கு முதியோர் கல்வி பரவியது. அது போலத்தான் இங்கும் பரவவேண்டும் என்பது என் அவா. 1952-ஆம் ஆண்டில் தென் கிழக்கு ஆசியக் கல்வி மாநாடு பம்பாயில் நடந்தது. ஐந்து வார காலம் அங்குத் தங்கி, அதில் பங்கு கொண்டேன். அப்போது பம்பாயில் முதியோர் கல்வி எப்படி நடக்கின்றது என்று கணக்கிட்டுப் பார்த்தேன். அவர்கள் நம்மைவிட மிகுதியாகத்தான் செய்கிறார்கள். நாம் எல்லாவற்றிற்கும் அரசியலாரைக் கேட்கின்றோம். முழுக்க முழுக்க அரசியலார் உதவி பெற்று, நாம் அதில் வெளிச்சம் போட்டுக் கொள்ளுகிறோம். "நாங்கள் எவ்வளவு சேவை செய்கிறோ பாருங்கள்’ என்று பறை சாற்றுகிறோம். அங்கே அரசியலார் உதவி 80 சத விகிதத்திற்கும் குறைவுதான். மற்றப் பொருள், நாட்டு மக்களிடம் இருந்து நன்கொடையாக வருகின்றது. அதைக் கொண்டுதான் இங்கும் நடைபெற வேண்டும். நாம் தருமம் செய்பவர்கள்; எது தேவை என்று உணர்ந்து செய்ய வேண்டும்.

ஆகவே, நீங்கள் பயின்று, சுவடிகளையும், நூல்களையும் ஆக்கியதோடுகூட முயன்று கற்றுக்கொடுக்கவும் வேண்டும். மற்றவர்களை இத்துறையின் வளர்ச்சிக்காக நன்கொடை அளிக்கத் தூண்டவேண்

— 49 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/55&oldid=493027" இலிருந்து மீள்விக்கப்பட்டது