பக்கம்:பூவும் கனியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



டும். இப்படிப் பலரும் கை கொடுத்து, பலரும் பல முயற்சியில் ஈடுபட்டால்தான் முதியோர் க ல் வி நன்றாய பரவ முடியும்.

எதிர்காலத்தில்

முதியோர் கல்வி விரைவிலே பரவ வேண்டும் என்பதுதான் என் ஆவல். அது ஐந்து ஆண்டிலா பத்து ஆண்டிலா என்று கணக்குப் போட்டால், ஓர் ஆண்டிலும் நடக்காது, ஒரு தலைமுறையிலும் நடக் காது. நான் 1940-ஆம் ஆண்டில் இந்தத் துறைக்கு வந்தேன். அப்போதெல்லாம்.'பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புங்கள்' என்று வீடு விடாய்ச் சென்று கேட்டோம்; பெற்றோர் கூட்டம் கூட்டிக் கேட்டோம். ஆயினும் அதிகப் பலன் இல்லை. இப்போதோ நிலை தலைகீழாய் உள்ளது. பிள்ளைகள் வருகிறார்கள், பள்ளிகளில் இடம் இல்லை. எவ்வளவு மாறுதல்! முன்பு `பலாப் பழம் உண்ண வாரீர்’ என்று அழைத்தோம்; இன்று பழம் இருப்பதனை உணர்ந்துவிட்டனர். ஈ மொய்ப்பதனைப் போன்று நிறைய வருகின்றனர். அதுபோன்று 2 வருடம் 4 வருடம் உணர்த்தி வந்தால் இந்தப் புதிய முயற்சி கிராமப் புறங்களிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள இந்த நேரத்திலே நல்ல பலனைத் தரும். இன்று போய் விட்டால் நாளை இந்த மலர்ச்சி வராது, உற்சாகம் காணப்படாது, ஊக்கம் இருக்காது.

— 50 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/56&oldid=493028" இலிருந்து மீள்விக்கப்பட்டது