பக்கம்:பூவும் கனியும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதியோர் கல்வி—வழியும் வகையும்



எனவே, இந்த நேரத்தில் எவ்வளவுக் கெவ்வளவு குழப்பம் இல்லாமல், சந்தடி இல்லாமல், ஆரவாரம் இன்றி, மிகுதியான விளம்பரம் இன்றி முதியோர் கல்வியினைப் பரப்ப முடியுமோ அவ்வளவு மிகுதியாகப் பரப்ப வேண்டும். சந்தடி இல்லாமல் நடக்கின்ற காரியம்தான் நிலையான காரியமாக இருக்கும்; பெரிய காரியமாக அமையும். அதிக விளம்பரம் இல்லாமல் இத்துறையில் ஈடுபட்டு, இந்நாட்டில் `எல்லோரும் கல்வி கற்றுப் பன்னருங்கலை ஞானத்தால், பராக்கிரமத்தால் அன்பால் உன்னத இமமலைபோல் ஓங்கிடும் கீர்த்தி எய்திடும்’ அந்த நல்ல நாள் நம் காலத்திலே வருவதற்கு நாம் பாடு படுவோமாக. உங்கள் பயிற்சியின் பயணாகப் பல நல்ல சுவடிகளை, நூல்களை இடைவிடாது ஆக்கிக் கொண்டே இருப்பீர்களாக எனக் கூறி அமைகின்றேன். வணக்கம்.

O

(முதலாவது முதியோர் இலக்கியப் பண்ணையின் நிறைவு விழா 13-12-66-இல் நடந்தபோது, கண்காட்சியைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு)

— 51 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/57&oldid=493029" இலிருந்து மீள்விக்கப்பட்டது