பக்கம்:பூவும் கனியும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விப் பயன்



மெய்யான அறிவு

பி. எஸ். ஜி. கலைக் கல்லூரி மாணவர்கள் நல்ல சமூகத் தொண்டர்கள் என்பது முன்னமே எனக்குத் தெரியும். முன்னர் ஒரு தடவை அவர்கள் சமூகப் பணியைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். அன்று கண்டு மகிழ்ந்ததைவிட இன்று பெரு மகிழ்ச்சியடைகிறேன்; அவர்களைப் பாராட்டுகிறேன். ஏன் எனில் கல்வியின் நோக்கம் நல்ல மக்களை-சான்றோர்களை- நல்ல தொண்டர்களை ஆக்குவதே ஒழிய, வெறும் அறி வாளிகளைமட்டும் உண்டாக்குவது அன்று; திறமை சாலிகளைமட்டும் உண்டாக்குவது அன்று. படித்தவன் யார், கற்றவன் யார், மெய்யான அறிவுடையவன் யார் என்றால், எவன் பிறருக்காகப் பாடுபடுகின்றானோ அவன்தான் மெய்யாகப் படித்தவன். அவன்தான் அறிவாளி என்பதனை நான் சொல்லவில்லை; வெகு காலத்திற்கு முன்னே இருந்த வள்ளுவர் கூறுகின்றார். அம் முறையிலே இக்கல்லூரி மாணவர்கள் வெறும் ஏட்டுப் படிப்போடு நிற்காமல், தங்களுக்குத் திறமையைத் தேடிக்கொள்வதோடுமட்டும் நிற்காமல் தொண்டுப் பண்பையும், சேவை முறையினையும் கற்கிறார்கள். அவற்றைக் கற்பதோடுமட்டு மன்றி, நடைமுறையிலும் கொண்டுவருகின்ற இவர்களே மனமாரப் பாராட்டுகின்றேன், வாழ்த்துகின்றேன். இதேபோல மேலும் என்றும் செய்யவேண்டுமாய் வணக்கத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.

— 53 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/59&oldid=493039" இலிருந்து மீள்விக்கப்பட்டது