பக்கம்:பூவும் கனியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



கேட்டுப் பயனடைக

இன்று இரண்டு நல்ல நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்று தலைவர் வானொலிப் பெட்டியைத் திறந்து வைத்த நிகழ்ச்சி. இதன்மூலம் நல்ல பாட்டுக்களைக் கேட்கலாம். பாட்டு, பொழுது போக்குவதற்கு மகிழ்ச்சியாக இருப்பதற்கு. அதுமட்டு மன்று; நல்ல பேச்சினைச் சில நேரமாவது கேட்கலாம். வள்ளுவர், 'கற்றிலனாயினும் கேட்க என்று சொல்கின்றார் இந்தக் கிராமத்தில் உள்ளவர்களில் பலர் பெரியவர்கள்; அந்தக் காலத்தில் படிக்க வாய்ப்புப் பெறாதவர்கள். இப்போதுகூட முதியோர் பள்ளிக்குச் சிலர் வருவீர்கள்; பலர் வரமாட்டீர்கள். பள்ளிக்கூடத்திற்கு வராவிட்டாலும் இந்த வானொலிப் பெட்டியைக் கேட்கவந்து, கேட்டு, புத்திசாலிகளாக, திறமைசாலிகளாக, கேள்வி அறிவு பெற்றுக்கொள்ளுங்கள். அப்படிப் பெறும் அறிவால் யாருக்கும் ஏமாறதவர்களாக இருக்க உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பிறருக்கு உதவுக

இன்னொரு நல்ல நிகழ்ச்சி என்ன என்று கேட்டால், நான் பல குழந்தைகட்கு, சிறுவர் சிறுமியர்களுக்குப் பரிசுகள் வழங்கியது; துணி, சட்டை, பாவாடைகளை வழங்கினேன். அவற்றை எல்லாம் வாங்கக் கல்லூரி மாணவர்கள் பணம் திரட்டிக் கொடுத்திருக்கிறார்கள்; அவர்களுக்கு என் நன்றியும்

— 54 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/60&oldid=493040" இலிருந்து மீள்விக்கப்பட்டது