பக்கம்:பூவும் கனியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விப் பயன்



வணக்கமும். சேவையி ல் உடல் உழைப்பைக் கொடுக்கப் பல மாணவர்கள் ஆயத்தமாயிருப்பர். பணம் கொடுப்பது என்றால் கொஞ்சம் கடினம். சினிமா இருக்கிறது; வேடிக்கை இருக்கிறது; இவற்றுக் கெல்லாம்போக மிச்சப்படுத்தி, உங்களைப்போல 'ஏழை பாழை’களுக்கும், நீங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று, உழைப்போடு, பணமும் உதவிய மாணவரைப் பாராட்டுகின்றேன். இப்படியே 'பகுத் துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்ற வள்ளுவர் குறள்வழி நின்று, உங்களால் ஆன உதவியை மற்றவர்க்குச் செய்ய வேண்டும், உடலுழைப்புத் தரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எப்படியும் குழந்தைகளைப் படிக்கவையுங்கள்

எனக்குப் பேரவா உண்டு. பேரவா தன்னைப் பொறுத்தவரை இருப்பது தவறு; மற்றவரைப் பொறுத்து-தேசத்தைப் பொறுத்து-இருக்கலாம். ஒன்று நடக்க வேண்டும்; இந்த நாட்டில் நடக்க வேண்டும்; மற்ற இடத்தில் நடக்கிறதோ இல்லையோ, தமிழ் நாட்டில் நடக்கவேண்டும். நடக்கக்கூடியது தமிழ்நாட்டில்தான் என்பது என் எண்ணம். இந்தத் தேசத்தில் அரிசனம், மற்றவர் என்று இல்லாமல் எல்லோரும் ஒரே சனம் என்ற நிலை ஏற்பட வேண்டும். மனிதர்களே இத் தமிழ்நாட்டில் இருக்கி

— 55 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/61&oldid=493041" இலிருந்து மீள்விக்கப்பட்டது