பக்கம்:பூவும் கனியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



றார்களே ஒழிய, அரிசனமோ அறியாத சனமோ! ஐயரோ ஐயர் அல்லாதவரோ, முதலியாரோ, பிள்ளையோ இல்லை என்று சொல்லும் நிலை வரவேண்டும். எல்லா மனிதரும் ஒரே இனம், ஒரே நிறை, எல்லோரும் ஒரு குலம் என்ற காலம் வரவேண்டும் என்பது என் அவா.'உழைக்கத் துணிபவர் அதற்கு உழைக்க வேண்டும். நெஞ்சு உரம் இருக்கின்றவர்கள் அதற்கு வழி காட்டவேண்டும்.

ஆனால் ஒரு சிலர் காட்டினால் மட்டும் போதாது. நீங்கள் இன்று 'ஏழைபாழை'களாக இருந்தாலும், அரிசனங்களாக இருந்தாலும், நாளை அந்த அரி என்பதனை நீக்கிவிட்டு மக்கள் ஆதல் வேண்டும். அதற்கு உங்கள் கடமையைச் செய்ய வேண்டும். என்ன கடமை? நாங்கள் என்ன ஆலையிலே, வயலிலே உழைக்கவில்லையா என்று கேட்கலாம். நீங்கள் உழைக்கிறீர்கள்; உண்மைதான். ஆனால், நீங்கள் உழைப்பதோடு இன்னொன்றும் செய்ய வேண்டும்? உங்கள் குழந்தை குட்டிகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். எவ்வளவு துன்பம் இருந்தாலும், வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிப் பள்ளிக்கூடம் அனுப்பவேண்டும். அங்கே சம்பளம் கொடுக்கவேண்டிய தில்லை. புத்தகம் வாங்கப் பணம் கொடுக்கவேண்டியது இல்லை. உடைக்கும், இப்படி மாணவர்கள் வந்து ஒத்தாசை செய்கிறார்கள். இந்த ஒத்தாசை வீணாகக்கூடாது. ஒரு கட்டுத்திட்டம் பண்ணிப் பள்ளிக்கு இந்தக் குழந்தைகளை யெல்லாம்

— 56 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/62&oldid=493042" இலிருந்து மீள்விக்கப்பட்டது