பக்கம்:பூவும் கனியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விப் பயன்



அனுப்ப வேண்டும். எவ்வளவு காலம்? ஒரு வருடம் 2, 3, 4, 5 வருடம் அனுப்பினால் போதுமா? போதவே போதாது. உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் வெற்றி பெற்றால் போதுமா? அதுவும் போதாது. உங்கள் பையன்கள் எல்லாம் கல்லூரியில் படிக்கிறவரை தாக்குப் பிடித்துத் துணிவாக, உற்சாகமாகத் தட் டிக்கொடுங்கள். உங்கள் துன்பம் உங்களோடே தொலையட்டும். அவர்கள் வாழ்வாவது நன்றாக இருக்கப் படிக்க வைக்கவேண்டும்.

இழிவு நம் தலைமுறையோடு தொலையட்டும்

"எல்லோரும் கல்லூரியில் படித்தால் மற்றவர்கள் என்ன ஆவது? அத்தனே பேருக்கும் வேலை எங்கே? என்றெல்லாம் கேட்பார்கள்.

எனக்கே நான் பதில் சொல்லிக்கொள்கிறேன். அதாவது நாங்கள் உயர்ந்த அலுவல் பார்க்கிறோம். எங்கள் அடுத்த தலைமுறை உங்கள் வேலையைச் செய்யட்டும்; அப்போது நீங்கள் அந்த அலுவல் பாருங்கள்; மாற்றிக்கொள்வோம். அலுவல்கள் கொஞ்சம்தான் என்றால், ஏன் பார்த்தவனே பார்க்க வேண்டும்? ஏன்? உயர் கல்வி ஒன்றால் எல்லோரும் சமமாய்ப் போகவேண்டும். சட்டத்தால் சொல்லால் சமமாகலாம். ஆனால் மெய்யான சமத்துவத்தை ஏற்படுத்தக் கல்விதான் துணைசெய்யும். ஆகையால்

— 57 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/63&oldid=493043" இலிருந்து மீள்விக்கப்பட்டது