பக்கம்:பூவும் கனியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



உங்கள் பிள்ளைகள் நிறையப் படிக்கவேண்டும். இவர்கள் கொடுக்கும் உதவியையும் பெற்றுப் பயன்படுத்தி, நல்ல காலத்தையும் நல்ல சூழ்நிலையையும் வீணாக்காமல், சண்டை சச்சரவில் போக்காமல் நம்மையெல்லாம் யார் இந்த நிலைக்குத் தள்ளினார் என்ற சவப் பரிசோதனையில் ஈடுபடாமல், `கீழே இருக்கிறோம் . மேலே போகவேண்டும்; விரைவில் போகவேண்டும்; நம் தலைமுறையிலேயே மேலுக்கு வர வேண்டும்' என்று பிடிவாதமாக முன்னேறவேண்டும். கைகொடுக்க இப்படிப் பலர் இருக்கும்போதே அவர்கள் கொடுக்கும் கையைப் பிடித்துக்கொண்டு நாம் முன்னேறவேண்டும். எனக்குப் பல விருப்பங்கள் உண்டு. பலவற்றைச் செய்ய எண்ணுகிறேன். என்னைப் போன்றவர்கள்மட்டும் நினைத்தால் போதாது. செல்வரும் செல்வாக்கு உள்ளவரும் ஆதரவு தரவேண்டும்.

இன்றைய மாணவர்கள் எதிர்காலத்திலும்
வழிகாட்டிகளாய் வாழவேண்டும்

மாணவத் தோழர்கள் இங்கே எப்படி எடுத்துக்காட்டாக இருக்கிறார்களோ, அதைப்போலவே, மெய்யாக, ஓரினம், ஓர் நிறை ஏற்பட- பேச்சிலேமட்டும் அல்லாமல், காரியத்திலே செய்ய-முற்படவேண்டும். இந்த மாணவர்கள், ‘எப்படி மாற்ற முடியும்' என்று சொல்லாதவர்கள்; 'பல காலப் பழக்கமாயிற்றே’

— 58 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/64&oldid=493045" இலிருந்து மீள்விக்கப்பட்டது