பக்கம்:பூவும் கனியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விப் பயன்



சுயமுயற்சி வேண்டும்

'கொடுக்கிறவர்கள் கொடுத்துக்கொண்டே யிருப்பார்கள்; நாம் பெற்றுக்கொண்டே யிருப்போம் என்றுமட்டும் எண்ணவே கூடாது. நாமும் நம்முடைய முயற்சியில் ஈடுபடவேண்டும். நம் தலைமுறையிலே நம் பெரியவர்கள் கையேந்தி நின்றால்கூட, வருகிற தலைமுறையிலே நம் குழந்தைகள் கையேந்தி நிற்கக் கூடாது. தங்கள் காலிலேயே நிற்க வேண்டும். சின்னக் குழந்தை தவழ்கிறது. நடக்க ஆரம்பிக்கும்பொழுது என்ன பண்ணுகிறோம்? நடைவண்டி பண்ணிக் கொடுக்கிறோம். அதைப் பிடித்து நடக்கி றது. காலமெல்லாம் நடைவண்டியையே பிடித்து நடந்தால் என்ன சொல்வோம்? "ஐயோ என் குழந்தை சப்பாணியாகப் போனது, நன்றாய் வளரவில்லை” என்று சொல்வோம்; திருப்தியடைவ தில்லை. அது போல, நடைவண்டிமாதிரி மாணவர்களும், மற்றவர்களும் உங்கட்கு ஒத்தாசை செய்தால் ஒரு தலை முறைக்கு ஒத்தாசை செய்யலாம். அடுத்த தலை முறைக்கும் இந்தமாதிரி யாராவது கொடுப்பார்களா என்று கை ஏந்திக்கொண்டிருந்தால், அது தேய்ந்து போன சமூகம், சப்பாணிச் சமூகம் என்றுதானே பொருள்? அப்படி ஆகக்கூடாது நீங்கள். உங்களிடம் உறுதி இருக்கிறது; ஊக்கம் இருக்கிறது. அறிவு சொல்லப் பலர் வருகிறார்கள். அவர்கள் சொல்

— 63 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/69&oldid=493050" இலிருந்து மீள்விக்கப்பட்டது