பக்கம்:பூவும் கனியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



அந்த இடத்தில்தான் செய்வான். ஆடுமாடு மாதிரி நினைத்த இடத்தில் மலம் இருக்கவோ, சிறுநீர் கழிக்கவோ மாட்டான். அதுதான் வேறுபாடு. அது எப்படி வரும்? இந்தக் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் வரவேண்டும். என்ன பழக்கம்? சுத்தமான பழக்கம், சுகாதாரமான பழக்கம். இதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். படிப்புச் சொல்லிக்கொடுத்தால்மட்டும் போதாது; இங்கே வருகிற மாணவர்கள் இவற்றையெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும். பாடம்மட்டும் அன்று; விளையாட்டு மட்டும் அன்று; நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம் வரவேண்டும். படித்த வன் என்றால், பார்த்த இடத்திலே சொல்லும்படி இருக்கவேண்டும். மறைவான இடத்திலே, யாருக்கும் ஒட்டாத இடத்திலே எவன் இருக்கிறானோ' அவன் படித்தவன். அக்கம் பக்கம் பார்த்துவிட்டு ”யார் நம்மைக் கேட்கிறார்கள்” என்று சாலை ஓரமாக இருக்கிறானே அவன் அறிவில்லாதவன். அவனை மனிதன் என்று நினைக்காதீர்கள். இந்த நல்ல பழக்கம் குழந்தைகளுக்கு வந்துவிட்டால் பத்து வருடத் தில் நம் நாட்டில் இருக்கும் கெட்ட பழக்கங்கள்-கேவலமான பழக்கங்கள் தொலைந்துவிடும். இந்தத் திருத்தம் குழந்தைகளிடத்தில் வரப் பாடுபடவேண்டும். மாணவத் தோழர்கள் அதற்கும் பாடுபட வேண்டும்.

— 62 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/68&oldid=493049" இலிருந்து மீள்விக்கப்பட்டது