பக்கம்:பூவும் கனியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விப் பயன்



ராசா. குடித்தலைவனும் இங்கேதான் இருக்கிறான்; படைத்தலைவனும் இங்கேதான் இருக்கின்றான். அன்றைக்கு நல்ல முரட்டு ஆளாகப் பட்டாளத்திற்கு வேண்டுமென்றால்-சின்ன வயதிலே பட்டினி போட்டு விட்டு, இருபத்தைந்து வயதிலே பட்டாளத்திற்கு ஆள் தேடினால் -எங்கே கிடைப்பார்கள்? படிப்பு வரநல்ல உடல் வலிமை இருக்க-குழந்தைகளுக்கு உணவு போடவேண்டும். இதுபற்றி அரசு எண்ணிவருகிறது. செய்வதற்கு நாமும் கை கொடுக்கவேண்டும். ஒரு கை தட்டினால் ஒலி வருமா? இரண்டு கை தட்டினால்தானே ஒலி? அதைப்போல அரசினர் செய்தாலும், ஒத்துழைப்பும், உடல் உழைப்பும் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்கிற உதவியைப் பெற்று, நமது நாட்டில் எல்லாக் குழந்தைகளும் படித்துப் பட்டினி இல்லாமல் இருக்கப் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு.

நல்ல பழக்கமும் ஒழுக்கமும்

பிள்ளைகள் நன்றாகப் படித்தால்மட்டும் போதுமா? தொழிலைக் கற்றுக்கொண்டால் மட்டும் போதுமா? மனிதனை மனிதன் ஆக்குவது எது? மனிதனுக்கும், ஆடுமாடுகளுக்கும் வேறுபாடு என்ன? ஆடுமாடுகள் நினைத்த இடத்தில் நினைத்த செயலைச் செய்யும். மனிதன் நாகரிகமானவன். மெய்யான நாகரிக மனிதன், அது அதை அந்த

– 61 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/67&oldid=493048" இலிருந்து மீள்விக்கப்பட்டது