பக்கம்:பூவும் கனியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



இருந்தால்தானே படிப்பு வரும்? பசி வந்திடப் பத்தும் பறந்துபோம். எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள். படித்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதே படித்தவர்கள் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அதாவது பிள்ளைகளுக்குப் பசித்தாலும் படிப்புச் சொல்லிக்கொடுக்க முடியும் என்று. அவர்கள் படித்த பாடத்தை அவர்களே மறந்துவிட்டார்கள். பசித்த பிள்ளைகளுக்கு எப்படிப் பாடம் சொல்லிக்கொடுப்பது? நாம் வேண்டுமானல் கிராமபோன் மாதிரி சொல்லிக்கொண்டே யிருக்கலாம். ஆனால் பசித்த பிள்ளைக்கு ஏறுமா? பயந்து வேண்டுமானால் கேட்டுக்கொண்டிருக்கும். மூளையில் ஏறுமா? ஏறவே ஏறாது. ஆதலால் அது தவறிப் போகிறது. தரம் குறைந்து போகிறது. '`இதெல்லாம் படிக்குமா? உருப்படுமா?" என்று பின்னால் சொல்கி றார்கள், நிரம்பப் பெரியவர்கள். நம்மால் அப்படிச் சொல்ல முடிவது இல்லை. எல்லோரும் முன்னுக்கு வருவார்கள். எப்பொழுது பசி இல்லாமல் குழந்தைகள் வயிறாரச் சாப்பிட்டால்; அப்போதுதான் ஆசிரியர் சொல்லும் படிப்பு ஏறும்; பயன் விளையும்; மேல் வகுப்புக்குப் போகும். ஆதலால் இல்லாத குழந்தைகட்குச் சோறு போடவேண்டும். எதற்காக?

பசியும் பாடும்

படிபபதறகுமட்டும் அன்று. இன்றைக்குப் பச்சைக் குழந்தை; 15 வருடத்திலே இந்தத் தேசத்து

— 60 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/66&oldid=493047" இலிருந்து மீள்விக்கப்பட்டது