பக்கம்:பூவும் கனியும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



இளமையும் எழிலும், ஊக்கமும் உறுதியும், வலிமையும் வாய்ப்பும் கொண்ட இளைஞர்களாகிய உங்களைக் கண்டு நானும் அத்தகைய நிலைகளை அடைந்துள்ள எண்ணத்தில் மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியைப் பெற நல்ல வாய்ப்பளித்த அனைவர்க்கும் என் நன்றி.

நான் வருகையில் உங்கள் தேசிய இராணுவப் படை அணிவகுப்பைக் கண்டு உளம் மகிழ்ந்தேன். ஆண்கள் மட்டுமா அணிவகுத்து நின்றனர்? பெண்களுடைய உதவிப் படையும் அணிவகுத்து, ஆண்மை பெற்று - நின்றதைக் கண்டேன். அப்போது பாரதியார் கனவு கண்ட புதிய சமுதாயம் என் நினைவிற்கு வந்தது. ஏறுபோல் நடையினராய் வாழவேண்டும் என்று பாரதி கண்ட கனவு செயலானதைக் கண்டு உளம் பூரித்தேன். எதிர் காலத்தில் அமையப் போகும் சமுதாயத்தில் எனக்குப் பெரியதொரு நம்பிக்கையும் ஏற்பட்டது.நம்பிக்கையால் விளைவது என்ன? இன்பம் அல்லவா? நம்பிக்கை கொண்டு இன்பம் அடைந்தேன்.

சரிநிகர் சமானம்

அணிவகுப்பிலே, ஆண்களும் பெண்களும் கச்சிதமாக உடுத்தி, மிடுக்காக நடந்து, ஒழுங்காகச் சென்று, அமைதியாகச் செயலாற்றினீர்கள். இந்தக் கச்சிதமும் மிடுக்கும் ஒழுங்கும் அமைதியும் என்றும்

— 66 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/72&oldid=493055" இலிருந்து மீள்விக்கப்பட்டது