பக்கம்:பூவும் கனியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக


உங்களிடம் இருக்கவேண்டும். ' மிடுக்கான நடை ஏறு போன்ற நடை பெண்களுக்கு ஏன், ஆண்களுக்குத்தானே” என்று இங்கே சிலர் எண்ணலாம். அது கடந்த கால எண்ணம். இப்போது ஆண்கள் போன்று ஏறு போன்ற நடையினைப் பெண்களும் பெற வேண்டும். இதனை நான்மட்டும் சொல்லவில்லை. எதிர்காலத்தை நன்குணர்ந்த பாரதியார்

 “நிமிர்ந்த நன்னடை,
      நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும்
      அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச்
      செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர்
      திறம்புவ தில்லையாம்”

என்று அறிவுறுத்திச் சென்றுள்ளார். பெண்கள் பல அறிவு பெற்று, நேரிய நெறி பெற்று, நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் பெற்று ஒழுகுவதால் எத்தகைய தவறும் வராது என்பது உண்மை. இதனை உணர்ந்து நம் நாட்டுப் பெண் மணிகள் நல்வாழ்வு, உரிமை பெற்ற வாழ்வு, ஒத்த வாழ்வு வாழ வேண்டும்.

— 67 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/73&oldid=493098" இலிருந்து மீள்விக்கப்பட்டது