பக்கம்:பூவும் கனியும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



போட்டி வேண்டும்

உங்கள் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டேன் பலரும் பரிசு பெற்றிருக்கிறீர்கள். வெற்றி பெற்றதற்குரியதான பல கோப்பைகளைக் காணுகின்றேன். மற்றத் தலைமையாசிரியர்களும் இவைகளைப் பார்க்க வேண்டும். தங்கள் பள்ளிகளும் இத்தகைய சிறந்த நிலையினை அடையப் பாடுபடவேண்டும். பாடுபட்டால் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறுவார்கள். சத்தியமங்கலம் மேலும் போட்டி போட்டு முன்னேற்றம் அடையும். சில நேரத்தில் போட்டி போடுவது மூலம் பொறாமை, காய்ச்சல், அவதூறு ஏற்படுவதுண்டு. அது விரும்பத்தகாத போட்டி, தாழ்வான போட்டி. ஆனால் உயர்வுக்குப் போடும் போட்டியில் காய்ச்சலுக்கு இடம் இல்லை. திறமையின் வளர்ச்சிக்குத்தான் இடம் உண்டு. வளர்ச்சிக்குத் தூண்டும் நல்ல போட்டி வேண்டும்.

அன்றைக்கு, ஒரு விளையாட்டு விழாவிற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு மாணவன் உயரத் தாண்டலில் 9’ 4” தாண்டினான் . `அவனோடு யாரால் போட்டிபோட முடியும்’ எனச் சளைத்துவிடவில்லை; பலர் போட்டி போட்டார்கள். அவனும் விடா முயற்சியோடு போட்டி போட்டான். இறுதியில் 9’ 10" தாண்டி வெற்றிபெற்றான். அவனோடு போட்டிபோட யாரும் முன்வந்திராவிடில், `நானே ராசா’ என்று

— 68 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/74&oldid=493056" இலிருந்து மீள்விக்கப்பட்டது