பக்கம்:பூவும் கனியும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



போது "நெற்பயிர் நிமிர்ந்து நிற்கவேண்டும். குத்திட்டு வளரவேண்டும்" என்று எதிர்பார்க்கிறோம். குத்திட்டு நிமிர்ந்து வரவில்லையானால் "நல்ல வளர்ச்சி யில்லையே” என்று கவல்கின்றன் உழவன். அதே பயிர் வளர்ந்து பால்கட்டி, நல்ல கதிர்விட்ட பிறகு பழுத்துப் படுக்க வேண்டும். நன்றாக விளைந்த கதிர்களையுடைய பயிர், நிறைய மணி பிடித்த கதிர்களை. யுடைய நெற்பயிர் அப்படித்தான் படுக்கும். அதன் படியேதான் நம் வாழ்வும். அறிவு வளர வளர வெற்றி வர வர, அடக்கமும் அமைதியும், தாழ்வு, பணிவும் ஏற்பட வேண்டும். இந்தக் கருத்தினைச் சிந்தாமணிச் செய்யுள் தெளிவாக விளக்குகின்றது

சொல்லருஞ் சூற்பசும்
பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருவிருந்து
ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை
நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரின்
இறைஞ்சிக் காய்த்தவே

ஆம், தேர்ந்த கல்வி பெற்றவர்க்கு அடக்கம் இயற்கையானதுதான். அடக்கம் ஏற்படவில்லை

— 70 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/76&oldid=493060" இலிருந்து மீள்விக்கப்பட்டது