பக்கம்:பூவும் கனியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக


யென்றால் அறிவு பெற்றும் பயனில்லை; வெற்றி பெற்றும் பயனில்லை. செருக்குக்கு இடம் கொடுத்தால் இறுதியில் அறியாமையும் தோல்வியுமே ஏற்படும் என்பதனை உங்கட்கு நினைவூட்டுகிறேன். வள்ளுவரும் இதனையே,

‘அடக்கம் அமரருள்
      உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து
      விடும்’

என்று தம் குறட்பாவில் கூறி வலியுறுத்துகிறார். ஒழுக்கமும் கட்டுப்பாடும் தமிழின் தனிச் சொத்து. அதனைப் போற்றிப் பாதுகாத்துப் பெருமை தாருங்கள். அப்போதுதான் கல்வியின் பயன் பெருகும்.

அரசியலாரின் பங்கும் நம் கடமையும்

நமது அரசியலார் நம்முடைய கல்வி வளர்ச்சிக்குப் போதிய ஆத ரவு கொடுத்துவருகிறார்கள். தொடக்கப்பள்ளி இல்லாத ஊரே இனி இருக்காது. 500-க்கு மேற்பட்ட மக்கட் தொகையுள்ள ஊர் தோறும் பள்ளிகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டுப்புறங்களில் 140 உயர் நிலைப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளன. இவைகளைப் பயன்படுத்தி எல்லோரும் நல்ல கல்வி பெற்று,

— 71 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/77&oldid=493099" இலிருந்து மீள்விக்கப்பட்டது