பக்கம்:பூவும் கனியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



ஆழ்ந்த கல்வி பெற்று, முழுக் கல்வி பெற்று, இந்நாட்டு மன்னர்களாக வளர வேண்டும். அப்போது தான் அரசியலாரின் முயற்சி பயனளித்த தாகும்.

உடலுக்குச் சோறு, உயிருக்குக் கல்வி

பள்ளிக்கூடங்கள் பலதுறைக் கல்விக்கு இட மளிக்க வேண்டும். வரப்போகும் ஒன்றை முன் கூட்டியே அறியும் அறிவு பெற்றவர்கள் கவிஞர்கள். அவர்களுள் ஒருவரே பாரதியார். அவர்,

'வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்:
பயிற்றிப் பல கல்வி தங்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்'

என்று கூறிச் சென்றுள்ளார். `பள்ளிகளில் பல துறைக் கல்விமட்டும் தந்தால் போதாது. கல்வி கற்கும் குழந்தைகளின் வயிற்றுக் கவலை போகச் சோறிட வேண்டும் என்கிறார். ஏன்? சோற்றுக் கவலை வந்துவிட்டால் எதனையும் செய்யமுடியாது. ஆகவே, 'சோறிட்டுப் பல கல்வி தரவேண்டும்' என்கிறார்.

பல கல்வி

பிள்ளைகள் திறமையும் அறிவும் பல திறப்பட் டவை. அவர்கள் ஆற்றலுக்கும் திறமைக்கும் ஏற்ற கல்வி தரவேண்டும். ஏட்டுப் படிப்புமட்டும் படிப்

— 72 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/78&oldid=493064" இலிருந்து மீள்விக்கப்பட்டது