பக்கம்:பூவும் கனியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக



பாகாது. தொழிற்படிப்பும் படிப்பாகும். ஏட்டுப்படிப்புக்கு எவ்வளவு அறிவு வேண்டுமோ, அவ்வளவு அறிவு தொழிற் படிப்புக்கும் வேண்டும். அந்த அறிவையும் திறனையும் ஐம்பதில் பெற முடியாது. இளமையிலேதான் பெற முடியும். ஐந்திலேயே குழந்தைகளின் அறிவுக்கும், ஊக்கத்திற்கும், ஆர்வத்திற்கும் ஏற்ற கல்வியைத் தரவேண்டும். அப்படிச் செய்யத் தவறும் கல்வியமைப்பு சிறந்த அமைப்பு ஆகாது. 'உழுகிற காலத்தே ஊர் சுற்றிவிட்டு, அறுவடை காலத்தில் அரிவாள்கொண்டு வந்தால் என்ன கிடைக்கும்?' என்ற பழமொழியை இங்கே எண்ணிப் பார்த்தால் 'பருவத்தே பயிர் செய்யும்’ பண்பு ஏற்பட்டுவிடும். எதிர்காலத்தில் நல்ல செல்வம் உடையதாக இந்திய நாட்டை அமைக்க ஏட்டுப்படிப்பும் வேண்டும்; தொழிற் படிப்பும் வேண்டும். இவைகளைத்தான் பாரதியார் பல கல்வி என்று பாடுகிறா.ர்.

உள்ளத்தில் உறுதி

ஆகவே இந்தக் குழந்தைகளெல்லாம் எதிர்கால அரசர்க ளாகவும், அரசிகளாகவும் திகழ்வதற்குப் பல துறைக் கல்வி மிகவும் வேண்டப்படுவது ஒன்றாகும். அப்போதுதான் எல்லோரும் தங்கள் `காலிலே நின்று’ செயலாற்ற முடியும். அவர்களை அம்முறையிலே

— 73 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/79&oldid=493065" இலிருந்து மீள்விக்கப்பட்டது