பக்கம்:பூவும் கனியும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



பயிற்றுவிக்கப் பெற்றோரும், ஆசிரியரும், மற்றோரும் பாடுபட வேண்டும். அதற்கு வேண்டுவது உள்ளத்தே உறுதிதான்.

'எண்ணிய எண்ணி யாங்

கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப்

பெறின்'

என்ற வள்ளுவர் வாக்கை நோக்குங்கள். நல்ல முறையில் நல்லனவற்றை எண்ணுங்கள்; எண்ணம் செயலாக வே ண் டு ம் என்ற உறுதிப்பாட்டினைக் கொள்ளுங்கள்; வெற்றி கிடைக்கும். எண்ணிச் செயலாற்றும் உறுதி பெற்று, இடன் அறிந்து, உரிய அறிவையும் காலத்தில் முயற்சியையும் செலுத்தினால் உலகத்தையே பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டாலும் வெற்றி பெறலாம். இதனைத்தான் நம் செந்நாப்போதார்,

‘ஞாலம் கருதினும்

கைகூடும், காலம்
கருதி இடத்தால்

செயின்'

என்று கூறினர்.

— 74 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/80&oldid=493066" இலிருந்து மீள்விக்கப்பட்டது