பக்கம்:பூவும் கனியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக



கல்விப் பயன்

ஏட்டுப்படிப்பும் தொழிற் படிப்பும் படிப்பதால் உயர்ந்த ஒரு பயன் ஏற்பட வேண்டும். என்ன பயன்? நல்ல பண்பாடு வந்தடைய வேண்டும். இல்லையென்றால் கல்வியால் பயனில்லை. பண்பற்ற கல்வி கல்வியாகாது. பண்பில்லாத அறிவு அறிவும் ஆகாது. படித்தவனிடம் வேற்றுமை தோன்றாது. ‘இவன் கரியன்; இவன் வெள்ளையன்' என்ற வேறுபாடு இருக்காது. ‘இவன் தாழ்ந்தவன், இவன் உயர்ந்தவன்' என்ற எண்ணமும் வராது. பிறர் வாழத்தான் வாழவேண்டும். தான் பெற்ற பொருளால் பிறரை வாழச் செய்ய வேண்டும். பிறர் துன்பம் கண்டவிடத்து அவர்கள் துன்பம் போக்கப் பாடுபட வேண்டும்.

'யாதானும் நாடா மால்

ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத
வாறு'

'பகுத்துண்டு பல்லுயிர்
ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம்

தலை'

— 75 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/81&oldid=493067" இலிருந்து மீள்விக்கப்பட்டது