பக்கம்:பூவும் கனியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவும் கனியும்



'அறிவினால் ஆகுவ
துண்டோ பிறி தினோய்
தன்னோய்போல் போற்றாக்
கடை'

என்ற பொய்யாமொழிகள் மேற்கூறிய கருத்துக்களை வலியுறுத்தும்.

பசியே வெறுப்புக்கும் பொறாமைக்கும் வித்து

கற்றவர்க ளாகிய நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். எண்ணிப்பார்க்க வேண்டும். எதனை? பள்ளிக் கூடத்திற்கு வந்து செல்லும் குழந்தைகளைப் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். பள்ளிக்கு வரும் குழந்தைகள் பல பட்டினியோடு ப.ள்ளிக்கு வந்து போகின்றன. பசியோடு படித்தால் பாடம் ஏறுமா? 'பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பதனை அறியாதவர் யார்! கல்வியின் தரம் குறைந்துவிட்டது என்று அங்கலாய்ப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பட்டினியோடு படிக்கும் குழந்தைகள் நல்ல தரம் உடைய கல்வி பெற முடியுமா? முடியவே முடியாது. பசியைப் போக்கப் பாடுபட வேண்டும்.

அதுமட்டுமா? தரம் குறைந்தாலும் குறையட்டும். கல்வியற்றோர் எண்ணிக்கை வளர்ந்தாலும் வளரட்டும். பட்டினியால் அவற்றைவிடக் கொடிய

— 76 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/82&oldid=493068" இலிருந்து மீள்விக்கப்பட்டது