பக்கம்:பூவும் கனியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக



ஒரு விளைவு உண்டு. 5, 10, 15 வயதிலேயே குழந்தைகள் உள்ளத்திலே வெறுப்புணர்ச்சி தோன்றிவிடுகிறது; பொறாமை வளர்கிறது. பொறாமையையும், வெறுப்பு உணர்ச்சியையும் வளரவிட்டால் எதிர் காலம் எப்படி அமையும்? 40 பிள்ளைகள் படிக்கும் இடத்தில் 20 பிள்ளைகள் பட்டினி என்றால், அவர்கள் என்ன எண்ணுவார்கள்? அவர்களிடையே வெறுப்பும் பகையும் ஏற்படுவது இயல்புதானே? அன்பும், நட்பும், உறவும் ஏற்பட்டு மகிழ்வாக வாழவேண்டிய இளம் பருவத்திலேயே அவைகள் வாழ வழியில்லா\மல் போய்விடுகின்றது. ஆகையால் அவ்வகை வேற்று மைகளைத் தொலைக்க-பசிக்கொடுமையைப் போக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். அம்முயற்சி பள்ளிக்கூடத்திலேயிருந்து தொடங்கட்டும். நல்ல சமுதாயம் உருவாகப் பாடுபடுங்கள். பள்ளிகளிலே பட்டினியோடு படிக்கும் குழந்தைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்துங்கள்.

நம் நாட்டு மக்கள் நல்ல மக்கள். வருபவர்க் கெல்லாம் வாரி வழங்கும் பண்புடையவர்கள். செல்வர்கள் மட்டு மல்லாமல் நம் நாட்டு ஏழைகளும் தங்களிடத்தே உள்ளதனைப் பகிர்ந்துகொடுத்து மகிழும் பண்புடையவர்கள். உண்ணும் நேரத்திலே ஏழை யொருவனின் குடிசையிலே நுழைந்துவிட்டால் தன் னிடம் உள்ள கஞ்சியினைப் பகிர்ந்து உண்ணும்

— 77 —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூவும்_கனியும்.pdf/83&oldid=492962" இலிருந்து மீள்விக்கப்பட்டது