உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| G4 பூவையின் சிறுகதைகள்

காப்பாற்றியிருக்கிறீர்கள். ஊஹரிம் சாத்திமில்லை. திரும்பவும் தந்தையின் முன்னிலையில்..உங்கள் முன்னிலையில்...அந்தோ!"

வார்த்தைகள் குழம்பின.

இளகிய நெஞ்சம் படைத்தவனல்லவா தமிழன்?

சேகரன் கண்கலங்கினார். கண்ணுச்சாமி செயலிழந்தான்.

டாக்டர் சிந்தித்தார். சிந்தனையின் தொடுவாயில் எண்ணங்கள் அலைபாய்ந்தன.

"காஞ்சனை கபடமற்றவள். பச்சைப் பசுங்குழந்தை போன்றது அவள் மனப்பண்பாடு. தகதகக்கும் செந்தணல் பிழம்புகளில் அவளைத் ម្ល៉េះ ចាំក្រវ៉ា அவளுடைய மலரவேண்டிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியிடத்தான் திட்டமிட்டிருப்பான் அந்த வஞ்சகன். அதன் நிமித்தம் அவள் வெந்து சாம்பலாக வேண்டியதுதானா? எத்துணை கோரமான நியதி நினைக்கவும் மயிர் சிலிர்க்கும் ஆணையல்லவா? உலகில் பிறக்கத் தவங்கிடந்து, பின் இப்படிச் சாவை அரவணைக்க அதற்கு வரவேற்பும் அளிக்கவேண்டுமா? கூடவே கூடாது. பெண் பாவம் பொல்லாதது. தூண்டிற் புழுவாகத் துடிக்கும் அவளுக்கு அபயமளிப்பதே புண்ணியம் கடமை. ஆம்; அவள் காப்பாற்றப்பட வேணும். இனி கொஞ்சனை என் உயிர்த்துணைவி.ஆகா!"

தன்னிடம் வேலைசெய்யும் காவற்காரனின் மகளைக் கரம்பற்ற முடிவு செய்தார் டாக்டர் வாழ்க்கைப் புத்தகத்தின் ஆரம்ப அத்தியாயம் அவளாலேயே துவக்கப்படவேண்டும். அவருக்கு அனைத்தும் கனவு மாதிரி தோன்றிற்று. - .

நீர்த்திரையிட்டிருந்த கண்களுடன் காஞ்சனையை நோக்கி "காஞ்சனை, நீ என்னை மணம் செய்துகொள்ள..." என்றார்.

இக்கேள்வியைக் கண்ணுச்சாமி எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அவன் முகத்தில் ஆச்சரிய ரேகை தாரை ஓடியது.

"டாக்டர், குற்றம் படைத்த என்னை ஏற்றுக்

கொண்டீர்களானால் அப்புறம் சமூகம் உங்களைத் துற்ற ஆரம்பிக்குமே.”