உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

சமூகம் அது கிடக்கட்டும். அதே சமூகம் உன்னுடைய மாசு மருவற்ற புனிதத் தன்மையை ஏன் ஊகித்துணர முடியாதென நினைக்கிறாய்.

"அப்படியென்றால் நான் வாழப் பிறந்தவள்தானா?

நன்றியின் மிகுதியில் அவள் கண்ணிர் உகுத்தாள். டாக்டரின் கால்களைப்பற்றிப் பணிய ஒடினான் கண்ணுச்சாமி.

ஆனால்...?

மறுவினாடி அண்டம் கலங்க எழும்பிய ஐயையோ என்ற வேதனை கலந்த அபயக் குரல் கேட்டுத் திரும்பினார் சேகரன்.

காஞ்சனையின் மார்பில் பதிந்திருந்த வாளைப் பிளந்து பிரவகித்துக்கொண்டிருந்தது குருதி வெள்ளம். தற்கொலை!...

ஒன்றும் தோன்றாமல் நின்ற டாக்டருக்கு உலகமே சுழன்றது. கண்ணுச்சாமி பேய்ச் சிரிப்பு உமிழ்ந்தான்.

என்ன தோன்றிற்றோ, அடுத்த கணம் மிட்டாதார் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் கண்ணுச்சாமி.