உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

i

{}

7

காய்ச்சலில் கஷ்டப்பட்ட குழந்தையின் முகம் வாடிவிட்டது. எண்ணெய் படாமல் சிக்கல் பாய்ந்திருந்த தேசத்தை மெல்லக் கைவிரல்களால் கோதியவண்ணம் தன் மகளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்

ங்காரம்,

ĝo

செல்லம்மாவுக்குக் கிட்டத்தட்ட எட்டு வயதிருக்கும். ஆனால் அந்த எட்டு வருஷங்களில் முழுசாக ஏழு வருடிைங்கள் தாம் தாயின் பராமரிப்பில் வளர அதன் தலையில் "லவிதம் இட்டிருந்ததுபோலும். அப்புறம் தாயற்ற மகளுக்குத் தந்தையின் பொறுப்புடன் தாயின்

ஸ்தானத்தையும் சேர்த்து நிர்வகிக்க வேண்டியவனானான் அவன்.

காய்ச்சி வைத்திருந்த கஞ்சியைக் குவளையில் சீராக ஊற்றி மகளிடம் நீட்டினான். மடமட வென்று குடித்தான் செல்லம்மா.

"இன்னும் கொஞ்சம்'

"ஊஹாம்! வேணாம்!"

தலையணையை இசைவாக வைத்துப் படுக்க வைத்தான் சிங்காரம்.

"அப்பா"

"துரங்கலையா கண்ணு?"

"அப்பா, பார்த்தியா மறந்து பூட்டேன். சாயந்திரமா மேஸ்திரி ஐயா வந்துட்டுப் போனாரு பணத்துக்கு..."

சிங்காரத்தின் மன அமைதியைப் பறித்துச் சென்றது, செல்லம்மா கூறிய சேதி, அவன் கலங்கினான். கடன்பட்ட நெஞ்சமாயிற்றே: மனைவியின் பிரசவத்திற்கென ஐம்பது ரூபாய் கடன் வாங்கியிருந்தேன் மேஸ்திரியிடத்தில், பிள்ளையும் தாயும் வேறாகப் புனர்ஜன்மமெடுத்துச் சுகமுடன் பிழைக்கவேண்டுமேயென்று. டாக்டர் பீஸிற்குக் கரைந்தது மேற்படி பனம். அவன் போதாத காலம் மனைவி பிரசவத்தில் இறந்துவிட்டாள். கடன் பட்டதுதான் கண்ட பலன்.

சாப்பாட்டின் நினைவே சிங்காரத்துக்கு இல்லை. தலைகனக்க தரையில் துணியை உதறி விரித்தான். விழி, வெள்ளத்தில் மிதந்தது.

அடுத்த நாள், சுடு சோறு வடித்துச் செல்லம்மாவுக்கு ஊட்டிவிட்டான். மிகுதியை நாலு வாயாக உருட்டிப் போட்டுக்