உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#08 பூவையின் சிறுகதைகள்

கொண்டு வேலைக்குப் புறப்பட எத்தனித்தான். ஜூரத்தின் அன்டயாளம் கொஞ்சமும் குறையாமல் இருந்தது செல்லம்மாவுக்கு. சிங்காரத்திற்கு இதைக் காண மனம் குமுறியது. அவன் உடல் நடுங்கினான் உள்ளம் சோர்ந்தான்.

'சிங்காரம்' என்று அழைத்தவாறு உள்ளே பிரவேசித்த மேஸ்திரியைக் கண்டதும் அவனுக்குத் திக் கென்றது. வாங்க ஐயா!' என்று உபசரித்தான்.

"சிங்காரம், பாவம் புண்ணியத்துக்கு மனசு இரக்கப்பட்டு, நோட்டுசாட்டுக்கூட இல்லாமல், ஐம்பது ரூபாய் சுளையா எண்ணித் தந்ததுக்கு இதுதான் பண்ணுவியா அல்லது இன்னமும் பண்ணப் போறியா? பணத்தைக் கொடுத்துப்புட்டு இப்படி நடையாய் நடக்கிறேன் பாரு. அதுக்கு என் புத்தியைச் சொல்லவேணும்! கடைசியாகச் சொல்றேன் எந்தக் குடி எக்கேடு கெட்டாலும் கடன் தொகை சாடா பொழுதுக்குள்ளே என் கைக்கு வந்துப்பிடணும்! சொன்ன பேச்சுக்கு மறுபேச்சுக்கு கிடையாது!...." என்று பொரிந்து கொட்டினார் மேஸ்திரி.

எதேச்சையாக அவர் திருஷ்டி அருகில் கலவரத்துடன் படுத்திருந்த செல்லம்மாமீது சென்று திரும்பிற்று. மின்னல் குமிழ் போன்ற அவள் கண்கள் மேஸ்திரியை ஏக்கத்துடன் துருவின. ஒரு கணம் துள்ளிக் குதித்தார் மேஸ்திரி. *

"சிங்காரம், எத்தனை நாளாக என் பணத்தைத் தண்ணிரில் அடிக்கத் திட்டம் போட்டிருக்கிறாய்? உன் மகள் கழுத்திலே போட்டிருக்கும் அந்தச் சரட்டை வித்துப் பணத்தைக் கொடு! இல்லாட்டி அந்தச் சரட்டைக் கடனுக்கு என்னிடம் கழற்றிக்கொடு: கொஞ்ச நஞ்சம் குறைஞ்சாலும் பரவாயில்லை. கடன் கழிஞ்சாக் காற்றுப்போல..."

நெருப்பைத் தீண்டியவன் மாதிரி திகைத்துவிட்டான் சிங்காரம்.

"ஐயா, உங்க கடனை எப்பாடு பட்டுத் தலையை அடகு வச்சாகிலும் கொஞ்ச நாளிலே கட்டிப்பிடுறேனுங்க. பொறுத்தது பொறுத்திட்டிங்க இன்னும் கொஞ்சம் பொறுங்க. உங்க பிள்ளை குட்டிங்க நல்லாயிருக்கும். ஆனா மகள் சரட்டை மட்டும் உயிர் போனாலும் கழற்றமாட்டேனுங்க..."