உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பூவையின் சிறுகதைகள்

"நீ சொல்றது ஏதும் புரியலையே"

"மச்சான், ஒங்களுக்குத் தெரியாதா? அந்த நாளிலே சண்க மவராசா தம் வில்லை ஒடிக்கறவுங்களுக்கத்தான் தம்மவ சீதையைக் கொடுக்கிறதாச் சொன்னாருன்னு கதை கேட்டிருக்கேன். இப்ப என்னாடான்னா பரிசல் பந்தயம்’ - -

"இப்பல்ல புரியுது. குணவதி கொஞ்ச முந்தித்தான் மாரிப்பயவந்து சேதி பூராவையும் சொன்னான். நானும் சரின்னு சொல்லிட்டேன்" என்றான் முத்தையன் சன்னக் குரலில்,

- "மச்சான் கண்ணாலம் கட்டிக்கிறதிலே எனக்கும் பாத்தியம் இருக்கு, ஒங்களை நெனைச்ச மனசு இனிக் கனாவிலேகூட அந்த பயமவன் மாரியை நெனைக்காது. அப்படியிருக்க என்னத்துக்குப் பந்தயமும் மண்ணாங்கட்டியும், மாரிப் பய என்னமோ சூது பண்ணி

"உஸ், சத்தம் போடாதே குணவதி. அவங்க ஒருவளிக்குத் தோதா வர்றபோது நாமும் கொஞ்சம் விட்டுக்கொடுக்கத்தான் வேனுமாக்கும். நீ ஒன்னுக்கும் கவலைப்படாதே. இப்பச் சொல்றேன்னு பாரு. கடைசிவரை நீ மட்டும் என் குணவதிதான்" என்றான் முத்தையன்,

குணவதிக்கு முத்தையன் கூறின வார்த்தைகள் தெம்பை ஊட்டின. அவள் கன்னங்களில் நாணம் தடம் பதிந்தது. சூரியனின் இளங்கதிர்கள் அவள் வதனத்தைப் பின்னும் சோபிக்கச் செய்தன. அக்காட்சியில் தன்னை மறந்தான் முத்தையன்.

அந்தி வானில் விந்தைக் கோளங்கள் மலர்ந்திருந்தன. அன்று தான் முத்தையனும் மாரியும் ஒப்பந்தம் செய்து கொண்ட பந்தயநாள். காவேரிக் கரையில் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்தனர். குணவதி படிக்கட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள். நாலைந்து நாட்களுக்கு முன்னிருந்த தைரியம் அவங்களுக்குத் தற்சமயம் இல்லை. எப்படியும் வெற்றிதன் மச்சான் முத்தையாவுக்குத்தான் என்பது நிச்சயமானாலும், ஒருக்கால் கெட்ட காலமாக மாரி பக்கம் அதிர்ஷ்டம் திரும்பிவிட்டால் தன் கதி என்னாகும் என்பதை நினைத்துப்பார்த்த அவளுக்கு அதிர்ச்சி உண்டாயிற்று. காதல் பரீட்சை அப்புறம் விஷப்பரிட்சையாகிவிடுமோ என்று மனம் நொந்தாள். இத்தைகைய இக்கட்டான நிலையில் கடவுள் பேரில் பாரத்தைப் போட்டுக் காணிக்கை வேண்டிக்கொண்டாள் குணவதி