உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 117

கண் மூடிக் கண் திறக்கும் போதில் கூட்டத்தில் அமைதி நிலவியது. முத்தையனைக் கண்டவுடன் ஓடிவந்து தைரிய மூட்டினாள் குணவதி. புத்துயிர் பெற்ற முத்தையன் சுதாரிப்புடன் படகில் தாவினான். அதே சமயம் மாரியும் ஜாடையாகக் குணவதியை நிமிர்ந்து நோக்கினான். ஆனால் அவள் இவனைச் சட்டை செய்யாமல் முகத்தை அப்பால் திருப்பிவிட்டாள். எதிர்பாராத ஏமாற்றத்தால் வேதனையடைந்த மாரி படகில் அமர்ந்தான். இரண்டுபேரும் மறுகணம் துடுப்பைத் தள்ள ஆரம்பித்தனர். ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் படகுகள் நீரைக் கிழித்தோடின. அக்கரை மூலையில் எல்லையிடப்பட்டிருந்தது கொடி ஒன்று.

அந்த வட்டாரத்தில் படகு ஒட்டுவதில் முத்தையன் ரொம்பவும் அனுபவம் பெற்றவன். ஆதலால் எவ்விதத்திலும் மாரியைத் தோற்கடித்துவிடலாமென்ற நினைப்பு. வரவர அவனுக்கு ஷோக்கு பிறந்தது. ஆனால் மாரியின் படகும் சளைக்கவில்லை.

கொஞ்ச நாழிகை சென்றது. எல்லையைத் தொட்டுத் திரும்பிய படகுகள் இரண்டில் ஒன்று மட்டுமே கண் பார்வையில் தெரிந்தது. ஜனங்கள் ஆர்ப்பரித்தனர். குணவதி கண்களைத் தீட்டிக்கொண்டு ஆதுரம் ததும்ப உற்று நோக்கினாள். அவளுக்கு அக்காட்சி உயிரையே மாய்த்துவிடும் போலாகிவிட்டது. யாரு மாரிப் பயலா? என்று அலறினாள் குணவதி.

திரும்பும் படகு கட்டாயம் முத்தையனுடையதாகவே இருக்கும் என்று எண்ணிய அவள், மாரியின் படகு வந்து நின்றதைக் கரையில் ஓடிவந்து பார்த்தாள். அப்படின்னா என் மச்சான் என்று மனதில் கேட்டுக்கொண்டாள் மாரிதோளில் முத்தையனை அணைத்து வருவதைக் கண்டாள். 'மச்சான்' என்று அலறி விழுந்தாள். முத்தையனுக்குச் சுவாசம் மிகவும் லேசாக வந்துகொண்டிருந்தது. எல்லாம். ஏதோ சூழ்ச்சி என்பது அப்போதுதான் குணவதிக்குப் புலனாயிற்று.

"குணவதி, ரெண்டுபேரும் முக்கத்தைத் தாண்டி திரும்பையிலே, முத்து படகு ஒட்டையாப் போச்சு. தண்ணி படகிலே ரொம்பினதைக் கூடக் கவனிக்காமத் திரும்பவும் படகைத் தள்ளி முந்த ஆரம்பிச்சுச்சு. திடீர்னு அப்புறம் பரிசல் தண்ணியிலே கவிழ்ந்து போச்சு தண்ணியிலே தத்தளிச்ச முத்தையனை நான் கஷ்டப்பட்டுத் தூக்கி எம்.படகிலே