உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

45


அறந்தாங்கி பட்டுக்கோட்டை ரஸ்தாவில் அந்தச் சாயாக் கடை இருந்தது. டீ என்றால் டீ. அப்படி இருக்கும். முன்டெல்லாம் அதாவது பவளக்கொடி பெரியவள் ஆவதற்கு முன்னர் அவளே நேரில் நின்று சாயா பரிமாறுவாள். வாடிக்கைக்காரர்களுடன் குழந்தைபோல விளையாடுவாள்; கிளிமாதிரிக் கிள்ளை மொழியைப் பாங்காக உதிர்ப்பாள், இளம் பூஞ்சிட்டுப் போன்று சிறகடித்துப் பறப்பாள். அவள் என்றால் ஏனையோருக்கும் ஒரு அன்பு மயக்கம்! அவள் மயக்க உரு:

பவளக்கொடி அலைகடலில் சேகரிக்கப்பட்ட முத்து; ஒளிபரப்பி ஒய்யாரமாய்த் திரியும் கடல் முத்து. பவளமாய் திறந்தால் முத்துக்கள் நகைக்கும்; கண் திறந்தால் வண்டுகள் ரீங்காரமிடும்; கன்னக் குழிவில் ரோஜா சிரிக்கும். அவள் காட்டு ரோஜா

அவள் பக்குவமடைந்ததும் கடையில் மாற்றம் நிகழ்ந்தது. அவள் இப்போதெல்லாம் சாயா போட்டு நேரில் வியாபாரம் பண்ணுவது நின்றுவிட்டது. அதற்குப் பதில் அவள் உள்ளறையில் எல்லாம் தயாரித்து, ஒவ்வொரு 'செட்'டாக வெளியே நீட்டுவாள். ஒவ்வொன்றையும் நிதானமாக வாங்கி வியாபாரம் செய்வாள் அவள் அம்மா.

நடேசன் அடுத்த பத்தாவது மைலிலிருந்தவன். காளைப் பருவம்; வயதின் பெரும் பகுதியைப் பர்மா - ரங்கூனில் கழித்தவன். ஊரின் சுற்றுச் சூழ்நிலைப் பாசி அவனைப் பற்றவில்லை.

அவன் பவளக்கொடியை முதலில் கண்டதுமே மனதை அவள் வசம் பறிகொடுத்துப்போனான். அவன் ஆணழகன்; அவள் பெண் பதுமை; அழகும் அழகும் பின்னின பூங்கொடிக்குத் தாவிப் படரக் கொழுகொம்பு கிடைத்துவிட்டால் அப்புறம் அதன் வளர்ச்சிக்கு கேட்கவும் வேண்டுமா?

இதே போன்றதொரு பொங்கல் திருநாளில் பவளக்கொடி நடேசன் முதல் காதல் சந்திப்பு நிகழ்ந்தது. அந்த வட்டாரத்தில் வழுக்கல் மர வேடிக்கை பிரமாதம். வானளாவிய கம்பமொன்று பூமியில் நடப்பட்ருக்கும். கம்பம் பூராவும் பசை வழிந்தோடும். விரல் பட்டால் 'சர்'ரென்று வழுக்கி விட்டுவிடும். கம்பத்தின் உச்சியில் சாயத் துண்டில் பத்து ரூபாய் முடிந்திருக்கும். பரிசைத் தட்டி, மார் தட்டிக்கொள்ள அனைவர் உள்ளமும் சுவரிலடித்த பந்தாக எழும்பும். பலர் பரிசைத் தட்டக் கனவு கண்டதுடன் சரி.