46
பூவையின் சிறுகதைகள்
கடைசியில் நடேசன் ஒருவனால் தான் சாயத் துண்டையும், பணத்தையும் கம்பத்தின் உச்சியிலிருந்து கொணரமுடிந்தது. ஆனால் கம்பத்தினூடே சார்ந்து இறங்குகையில் அவன் கால் பின்னிச் சறுக்கிவிட்டது. 'தொபுகடிர் என்று பூமியில் சாய்ந்தான்.
சுய நினைவு வரப்பெற்றதும் நடேசன் துயில் நீத்து விழிகளை மலரத் திறந்தான். அவன் ஒரு பெண்ணின் கண் காணிப்பில் இருப்பதை அறிந்தான். உடம்பில் லேசாக வலியிருந்தது; பலத்த காயமில்லை.
'மச்சான், மச்சான் என்று பன்னெடு நாள் பழகிய பாவனையில் ஆதரவு செய்த பவளக்கொடியைக் கண்டதும், நடேசன் மெய்மறந்தான்; உடம்பு வேதனையை மறந்தான். உலகமே ஒரு சொப்பன சொர்க்கமாகத் திகழ்ந்தது. அதில் அந்த நங்கை கனவுக் குமரியாக மாய மோகினியெனத் தோற்றம் கொடுத்தாள். அழகின் அன்வயமன்றோ அவள்:
ஆம், அவள் அவனுள் உருமாறினாள். அப்படியே அவனும் அவளுள் இடம் பெற்றான்.
ஆக மறு மூன்று நாட்களும் நடேசன் அவள் வீட்டில் தங்கும்படி வாய்ப்பு அவர்களை ஒன்று கூட்டியது.
"மச்சான் அன்னிக்குக் கம்பத்திலே ஒவ்வொரு அடியா முன்னே ஏறிக் கடைசியாய்ச் செயிச்சதைக் கண்டதும் எம்மா சந்தோசப் பட்டுப்பூட்டேன் தெரியுமா? ஆனா, அதே சுருக்கிலே நீங்க கீழே விழுவிங்கன்னு கனாக்கூடக் காணல்லே, இதுமட்டும் உயிரு தப்பிச்சது புண்ணியந்தான்" என்ற பவளக்கொடியின் தேறுதல் அவனை ஆறுதல் படுத்தியது. இதெல்லாம் பழைய கதை.
"பவளக்கொடி, பவளக்கொடி" சுய நினைவு பெற்ற பவளக்கொடி அலறியடித்துக்கொண்டு வந்த தன் அன்னையைக் கண்டதும், 'என்னவோ ஏதோ வென்று பதைத்துவிட்டாள்.
"தங்கச்சி, ஒன் மச்சான் காட்டுக் காய்ச்சலிலே செத்துப் போயி நாலைஞ்சு நாளாயிடுச்சாமே?” என்று ஒலமிட்டாள் செல்லி.
'மச்சான் எப்போது வரும் என்று நாட்களை ಹಹಹ6Tತಹ கழித்து வந்து பவளக்கொடி இந்த எதிர்பாராத இடியைக் கேட்டதும் மனமிடிந்தாள் பித்துப் பிடித்தவள் கணக்கில் அலறினாள். அடுத்த