பூவை எஸ். ஆறுமுகம்
47
தருணம் அவளை ஆறுதல் படுத்த வந்த அவள் ஆயா விடம் அவளுக்கு ஆத்திரம் பற்றி எரிந்தது. எரிச்சல் மூண்டது, தீயின்றிப் புகையா?
நடேசனைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் தீர்மானத்தை ஒரு நாள் பேச்சு வாக்கில் தன் தாயிடம் பவளக்கொடி எடுத்துரைத்தாள்.
"தங்கச்சி, நடேசனை நீ கட்டிக்கிறதுக்கு அட்டியில்லை. ஆனா அதுகிட்டே பேருக்குக்கூட நாலு காசு பணம் கிடையாதாமே. நம்ப பலகாரக் கடை மிச்சத்திலே எப்படி மூணு வயிறு நிரப்ப ஏலும்? நீ ரோசனை செஞ்சுக்க, பவளம்"
சொல்லாமல் சொல்லிய கிழவியின் பேச்சு நடேசனுக்கு எட்டியது.
"பவளக்கொடி, எண்ணி ஒரு வருசத்துக்குள்ளே எப்பாடுபட்டும் கையிலே நாலு பத்துச் சேர்ந்திடும். கொஞ்சம் பசையுடன் திரும்பி வந்து உன்னைக் கண்ணாலம் செய்துக்கிறேன். உன் நினைவு ஒண்ணுதான் எனக்குப் பலத்தைத் தரமுடியும், பவளக்கொடி"
அவள் பவளவாய் திறந்து விடை ஈந்தாள். இச்சம்பவத்தை மீளவும் நினைவுகூர்ந்த அவள், பெற்றவளை நிந்தித்தாள். யார் யாரை நோவது? அம்பு எய்தவள் அக்கிழவி. அம்பை நோவதா? அவளைக் கோபிப்பதா? அவள் ஏங்கினாள். இங்ங்னம் அதிர்ச்சி ஏற்படும் என்று அவள் எப்படி எதிர்பார்த்திருப்பாள். பாவம்? பின்னர் நிகழவிருக்கும் நியதியின் நீதியை முன் கூட்டியே அறியும் அஷ்டசித்தி படைத்த மாமுனியா அவள்? -
'ஜம் ஜம் என்று சதங்கை ஒலி முன் அறிவிப்பு மொழிய வந்து நின்ற வில் வண்டியிலிருந்து மாசிமலைத்தேவன் இறங்குவதைக் கண்ட பவளக்கொடி உள்ளே சரேலெனப் பாய்ந்தாள்.
'ஆயா, மாமா வந்திருக்காக என்ற அளவில் படபடப்புடன் கூறியதைக் கேட்ட கிழவி செல்லி ஆச்சரியம் பொங்கக் கையில் வெற்றிலைச் சம்புடத்துடன் வெளியே வந்தாள்.
"வா, தம்பி, செளக்கியமா? ஏது இந்த வீடு தேடி அத்தியூத்தாப்பிலே, உம்; முதலிலே வெத்திலை போடு தம்பி"