உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளக் கொடி

جعبر 莎禽警 * তুঃ

'ஆர் வெற்றிலை பாக்கு வைத்தாகி விட்டது.

விடிந்தால் கல்யாணம்.

ரங்கூன் தேவர் என்று அழைக்கப்பட்ட சின்னத்தம்பித் தேவரின் ஒரே மகனான சிரஞ்சீவி முத்தையனுக்கும், சிங்கப்பூர்த் தேவரென்று கூப்பிடப்பட்ட பெரியண்ணத் தேவருடைய ஒரே மகளான செளபாக்கியவதி பளவக்கொடிக்கும் திருமணம்.

இந்த சுபச் செய்தியைக் கேள்விபட்டதும், பணங்குளம் மட்டுந்தானா மூக்கின்மேல் விரலை வைத்தது?

"கண்டீங்களாடி பொண்டுகளா இந்த அதிசயக் கூத்தை? நம்ப பவளக்கொடி வாழ்க்கைப்பட்டால் தன்னோட சொந்த அயித்தை மகன் வீரமணிக்குத்தான் வாழ்க்கைப்படுவேன்; இல்லாங்காட்டி, காளிகோயில் பாதாளக் கேணியிலே குதிச்சு உசிரை விட்டுப்புடுவேனாக்கும்' அப்படின்னு வீறாப்புப் பேசினாளே?. ஆனா, இப்ப கதையே மாறிப் பூடுச்சுதே?... பாவம், பவளக்கொடி. பவளக்கொடி அப்பனுக்கும் வீரமணி அப்பனுக்கும் இடையே ஊடாடி உரப்பட்ட அந்த ஜன்மப் பகைமை கெலிச்சதுதான் மிச்சம் போலே. ஆனா, பவளக்கொடியும் வீரமணியும் தங்க அப்பன்மார்களையும் எகிறிக்கிட்டு ஒண்ணடி மண்ணடியா கூடிக்குலாவிப் பேசி மகிழ்ந்ததெல்லாம் இனிமே கதையாகப் போகுதேடி, பொண்டுகளா!...."

சமைந்த பெண்கள் கற்களாகச் சமைந்து போனார்கள்.

"என்னாங்கடா இது? நம்ப சேக்காளி வீரமணி, தன்னோட அம்மான் மகள் பவளக்கொடியைக் கொண்டுக்கிட வேணும்னு ஒரே வைராக்கியத்தோட ஒத்தைக்காலிலே நின்னுக்கிட்டிருந்தானே? இப்ப என்னடான்னா கதையே தடம் மாறிப் பூடுச்சே?... என்னோட பவளக்கொடி கழுத்திலெ என்னைத் தவிர இன்னொரு பய இந்த ஊர் நாட்டிலே மூணு முடிச்சுப் போட்டுப்புட ஏலுமா? அப்படிக்கொத்த