உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

பூவையின் சிறுகதைகள்


ஒரு இடுசாமம் வரும்னு புரிஞ்சா, அப்பவே எம்புட்டு அம்மான் மகளைச் சிறை எடுத்துக்கிட்டுப் பறந்திட மாட்டேனா நான்? அப்படின்னு மார்தட்டிப் பேசினானேடா நம்ப வீரமணி?... ஐயோ, பாவம்' வீரமணிக்கு இனி பைத்தியம்தான் பிடிக்கப்போகுது... ஊம்."

இள வட்டங்களுக்கிடையிலும் குமுறல்!

ஊர் வெற்றிலை பாக்கு வைத்தாகிவிட்ட பிறகு, இனிமேல் ஊர் பேசி என்ன, உலகம் பேசி என்ன?

விடிந்தால் முகூர்த்தம்!

淑 ※ ※ ※ ※ 崇

பெரியண்ணத் தேவருக்கு சந்தோஷம் தலைகால் புரியவில்லை. இந்த ரகசியத்தை வாசலை அடித்துப் போடப்பட்டிருந்த மனப்பந்தலின் நட்ட நடுவில் எரிந்து கொண்டிருந்த காந்த விளக்கு அம்பலப்படுத்திக் கொண்டேயிருந்தது.

"உங்க மச்சான் வேலுத் தேவர் வீடு தவிர பாக்கியுள்ள சகலத்தனை வீடுகளிலேயும் கண்ணாலப் பத்திரிகையும் ஊர் வெற்றிலைப் பாக்கும் வச்சு விருந்தும் சொல்லிப்புட்டோமுங்க அண்ணாச்சி'

"சபாசு!" என்று வாய்விட்டுச் சிரித்தார் பெரியண்ணன். "பாவம், வேலுத் தேவனும் அவன் மகன் வீரமணியும் உப்புப் போட்டுச் சாதம் உண்ணிருந்தாக்க, இம்மா நேரம் அவங்க ரெண்டுபேருக்கும் நானும் என் தங்கப் பொண்ணு பவளக்கொடியும் செஞ்சு காட்டின அவமரியாதைக்கு கேணியிலெ விழுந்து உசிர்களை மாய்ச்சுக்கிட்டிருக்கோணும்!... என்னமோ, காளிகோயில் முதல் காளாஞ்சி தாவாவிலே ஆந்தா மூத்தவள். வேலுத் தேவனுக்கு அனுசரணையாக இருந்ததாலே, என்னோட வீம்பு பலிக்காமல் போயிடுச்சு அதுக்காக அவன் ஊருக்கு உசந்த மனுசனாக ஆகிவிட ஏலுமா? என்னோட பணத்துக்கும் பகைக்கும் முன்னாடி அவன் எம்மாத்திரம்? அதனாலேதானே ரங்கூன் தேவர் எங்க வீட்டுச் சம்பந்தத்தை விரும்பி வந்து ஏற்றுக்கிடவும் வாய்ச்சுது! ... சரி, சரி, பொழுது ஒடிக்கிட்டிருக்குது. வாழைமரம் கட்டுங்க. கூந்தல் தோரணம் கட்டியாகணும். ஆளுக்கொரு சாயாத் தண்ணியை ஊத்திக்கிட்டு வந்து, அலுவலை முடிச்சுப்புட்டுத்தான் தலையைச் சாய்க்க வேணும்' என்றார் அவர. -