பூவை எஸ். ஆறுமுகம்
5
7
முதுகுப்புறத்திலிருந்து பெருமூச்சுச் சத்தம் கேட்டது.
பதற்றம் மூள திரும்பிப் பார்த்தார் பெரியண்ணத் தேவர், "அடடே, பவளமா? வாம்மா, வா' என்றார். அவரது கரிய பெருவிழிகள் மகளைத் துருவி அளந்தனவோ?
பவளக்கொடி முல்லைப்பூ மலர்வது போலப் புன்னகை காட்டினாள்; "அப்போ, முதல் காளாஞ்சி தவசலிலே உங்களுக்கு அயித்தை புருசன் ஏற்படுத்தின அவமானத்துக்கு ஒருபடி கூடுதலாவே இப்ப நீங்க அவங்களுக்குச் செஞ்சு காட்டிப்புட்டீங்களே? பலே!... பலே! நம்ம வீட்டு விருந்துச் சாப்பாட்டுக்கு அவங்களுக்குப் பொசிப்பு இல்லாமல் பூடுச்சே பாவம்" என்று ஏளனம் காட்டி நகைத்தாள்.
"அல்லாத்தையும் எங்கண்ணு கேட்டுக்கிட்டுத்தான் இருந்தியாக்கும். நீ சொல்றது. ஒட்டு மொத்தமான உண்மை அம்மா."
"உங்களுக்கு வார நல்லது கெட்டது எல்லாம் உங்க மகளுக்கும் சேர்த்துதான் என்கிற துப்பு எம்புட்டுக்கன்னி நெஞ்சுக்கு மட்டுப்பட்டடியும் உங்க வழிக்கு வந்திட்டேனே, அப்பா?
"ஆமா, ஆமா" என்று பெருமை சுடர் தெறிக்கச் சிரித்தார் தேவர் "அது சரி, நெக்லேஸ் புடிச்சிருக்கா?” என்று கேட்டார்.
"பிரமாதமா இருக்குங்க!”
"தென்னம்பாளைச் சங்கிலி?
"கழுத்துத் தாங்காது போலிருக்குங்க"
"அப்பிடியா? சம்பந்தி வீட்டு அந்தஸ்துக்கும், நம்ப அந்தஸ்துக்கும் தக்கனைதான் அல்லாத்தையும் வீச்சாவே முடிச்சிருக்கேனாக்கும்"
அப்போது சம்பந்தி வீட்டிலிருந்து முகூர்த்தப்பட்டு வந்தது. நானம் கண் பொத்தி விளையாட "ரொம்ப நேர்த்தியாய் இருக்குன்னு நான் சொன்னதாகச் சொல்லியனுப்புங்க, அப்பா' என்றாள்.
"அப்படியே சொல்லியனுப்புறேன். நேரமாயிருச்சுது. காலா காலத்திலே நீ சாப்பிட்டுப்புட்டு கெட்டியமாய்ப் படுத்துத் துரங்கம்மா, பவளக்கொடி" என்றார் தந்தை.