பூவை எஸ். ஆறுமுகம்
வீரமணி தலையை ஆட்டினான்:
ふ9ぶ へ登. い* "、 .曽ッ *姆* Q ※ 漆 ※ 泳 ※
மாப்பிள்ளை அழைப்பு முடிந்தது. படகுபோல அலங்கரிக்கப் பட்ட காரிலே பவனி வந்த மாப்பிள்ளை முத்தையன், புதிய முறுக்கு மீசை இளம்பரிதியில் மின்ன, தோளில் டிரான்ஸிஸ்டருடன் காரிலிருந்து இறங்கி மணலறையில் அமர்ந்தான்.
மாப்பிள்ளையை உட்கார வைத்துவிட்டு உள்ளே விரைந்தார் சிங்கப்பூர்த் தேவர்.
ஆனால்...
ஏன் இப்படிப் பதறுகிறாள் தேவரின் மனைவி வள்ளியம்மை?
"மச்சான், நம்ப பொண்ணைக் காணலிங்க, எல்லா நகை நட்டுகளையும் போட்டுக்கிட்டிருந்த பொண்ணுகிட்டே கங்கணம் கட்டிக்கிடுறதுக்குப் புதுப் பட்டைக் கட்டிக்கிடச் சொல்லிட்டு உள்ளாற பலகாரம் சுட்டுக்கிட்டு இருந்தேன். மாப்பிள்ளைக்காகத் திரும்பி வந்து பார்த்தாக்க, நகை நட்டுங்க அல்லாம் ஆல வீட்டிலே அப்படியே அப்படியே இருக்குதுங்க! நம்ப மகளைக் காணலிங்க!"
தாய் துடிக்க, தந்தை துடித்தார்.
'காளி ஆத்தா, என்ன சோதனை இது?... நான் எப்பிடி சம்பந்திக்காரங்க மூஞ்சியிலே முழிப்பேன்? தவித்துத் தண்ணீராக உருகின பெரியண்ணத் தேவர், உறவுக்காரர்களை அழைத்துப் பவளக்கொடியைத் தேடும்படி காதோடு காதாக உத்தரவிட்டார் அவர். மாப்பிள்ளையோ டிரான்ஸிஸ்டரில் பாரதத்திடம் மண்ணைக் கவ்விக் கொண்டிருந்த பாகிஸ்தானின் நிலையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
தேடப் போனவர்கள் வெறுங்கையாகத் திரும்பினர்.
அப்போது ஒருவன் ஓடிவந்து, "உங்கா அக்கா மகன் வீரமணியையும் வீட்டிலே காணலிங்க!" என்றான். "மெய்யாலுமா" என்று கேட்டுப் பதறினார் தேவர். 'ஒரு வேளை, வீரமணப் பயல் எம் மகளைக் கடத்திக்கிட்டுப் பறிஞ்சிருப்பானோ? என்ற ஐயப்பாட்டில் துடித்த வண்ணம் கொல்லைப்புறமாக ஓடினார்; "அக்கா, எங்கே வீரமணி?" என்று பதட்டம் மூள வினவினார்.
"ஏம்ப்பா, விருந்து சாப்பிடவா?" என்று கேட்டாள்.