பூவை எஸ். ஆறுமுகம் ôi
விட்டோம்! இது ஆத்தா பேரிலே ஆணை வச்சுப் பேசற தாக்கல்! இதை நீங்க நம்புங்க. பவளத்தை ஏற்றுக்கிடுங்க. வாங்க மணவறைக்கு!...”
"வீரமணி" என்று விளத்தான் முத்தையன், அவன் கண்களும் பனித்தன; 'தம்பி, நான் இதயம் இல்லாத பாவி இல்லே. உன்னோட பவளம் உன்னோட பவளமாகவே எப்போதும் இருக்கட்டும்!... குறித்த முகூர்த்தத்திலே நீ உன் பவளத்துக்குத் திருப்பூட்டு!... என்னைப் பார்க்கிலும் நீயேதான் சகலத்தனை வகையிலவும் உன்பவளத்துக்குப் பொருத்தமானவன். ம்.. இன்னொரு சங்கதியையும் கேட்டுக்க நான் நாளைக்கு வாரு க்கு கிளம்பிடறேன். அழைப்பு வந்திருச்சி. இதோ, இந்த டிரான்ஸிஸ்டரிலே."
முத்தையன் கம்பீரமாக மணப் பந்தலைவிட்டு நடக்கலானான்.
பவளம் உள்ளே போனாள்!
洪、洪 浜 ※ 淑
"முகூர்த்த வேளை முடியப் போவுது சீக்கிரம் மணவறையிலே
வந்து குந்திக்கிடுங்க, மாப்பிள்ளை' என்று பகைகடந்த பாந்தவ்யத்தோடு கெஞ்சினார் பெரியண்ணத் தேவர்.
"பவளம்...!"
"இதோ வந்துடுவா - பட்டு உடுத்துக்கிட்டு..."
"வீரமணி!...தம்பி!" என்று அலறிக்கொண்டு வந்தான் முத்தையன்: "தம்பி, உன் பவளம் விருந்து அடுப்பிலேருந்து கொள்ளிக் கட்டையை லாவி எடுத்து அதைத் தன் சேலைத் தலைப்பிலே வச்சுக்கிடுச்சு ... ஒடியாயேன்!"
எல்லாரும் உயிர் துடிக்க, உள்ளம் துடிக்க, திட்டி வாசலுக்கு ஓடினர்.
அங்கே...
தீச்சுடர்கள் அவள் மேனியெங்கும் தொட்டுத் தோடர்ந்து கொண்டிருந்தன. -
"பவளம்: பவளம்" என்று ஒலமிட்ட வீரமணி, தண்ணிர் வாளியுடன் அவளை நெருங்கினான்.