உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

2

பூவையின் சிறுகதைகள்

"மச்சான் அங்கிட்டே நில்லுங்க! ஆமா, செப்பிட்டேன்" என்று ஆணையிட்டாள் பவளக்கொடி.

"பவளம்! என்ன விளையாட்டு?

விழி வெள்ளம் கரை புரள, பவளம் இதழ் திறந்தாள்; "மச்சான்! இது விளையாட்டு இல்லீங்க... இது அக்கினிப் பிரவேசமாக்கும். சீதாப்பிராட்டி தீக்குளி நடத்தினாங்களே, அது ராமர் சாமிக்கு மட்டுந்தானா? ஊர் உலகத்துக்காகவும் தானுங்களே?... அந்த நாள் தொட்டு உங்களுக்கிண்ணே காத்துத் தவம் கிடந்தவள் நான். ஆனா, இடை, நடுவிலே கதை தடம் மாறிப் பூடுச்சு... ஆனாலும், விதிப்படி அந்தக் கதை முடிய வேளை பார்த்துக்கிட்டும் இருக்குது. அதுக்குள்ளாற, நான் என்னோட பரிசுத்தத்தை உங்களுக்காக இல்லாட்டியும், ஊர் உலகத்துக்கு மெய்ப்பிச்சுக் காட்ட வேணுமில்லே!... என்னைப் பெரிய மனசு பண்ணித் தடுக்காதீங்க... எப்பவுமே நான் உங்க சொத்தேதான். அட்டியில்லேதான். ஆனாலும், உங்களால சிறையெடுக்கப்பட்ட நான், இப்போ திரும்பி வந்திருக்கேன். உங்களுக்கேதான் வாழ்க்கைப் படவும் போறேன். ஆனாலும்... என்னை ஊர் உலகம் தூய்மையானவள் அப்படின்னு ஒப்புக்கிட வேண்டாமா?

பவளக்கொடி தீயாகச் சிரித்தாள்.

"பவளம்! நீ தங்கம்! சொக்கப் பச்சை ஆத்தா நீ! உத்தரவு தா!... நெருப்பை அணைச்சுப்புடுகிறோம் தாயே!.."

அழுகுரல்கள் விண்ணைச் சாடின.

"காளி ஆத்தா... என் பவளத்தைக் காப்பாற்ற மாட்டீயா, தாயே மூத்தவளே?. சரி, நானும் என் பவளத்துக்குத் துணை போறேன்..."

வீரமணி வெறிகொண்ட நிலையில், பவளத்தைச் சுற்றி எரிந்து கொண்டிருந்த தீக் கங்குளைச் சரண் அடைந்தபோது....

'பட பட வென்று நீதியின் தீர்ப்புப் போலே முழங்கத் தலைப்பட்டது வானம்: ஆமாம், அதோ மழை பொழிகிறது!