இறந்தாங்கி ஸ்டேஷனில் ரயில் நின்றதுதான் தாமதம், ரயிலினின்றும் ஜனங்கள் கும்பல் கும்பலாக இறங்க ஆரம்பித்தனர்; அவர்களில் குமாரசாமியும் ஒருவன். தலையில் சுமந்திருந்த பெரிய மூட்டையுடன் ரயில் நிலையத்தைவிட்டு ஊருக்குள் நடந்தான். வெய்யிலின் வெக்கை சற்று தனித்திருந்தது; அந்தி மயங்கும் வேளை.
ஊரின் முன்னடியிலிருந்த கடையில் சாயா குடித்துவிட்டுப் பணத்தை முதலாளியிடம் நீட்டிய வண்ணம் ஏனுங்க, ஆவணத்தாங்கோட்டைவரை துணைக்கு ஒரு ஆள்வேனும். சில்லரை எதாச்சும் கொடுத்துடலாம்; கிடைக்குங்களா?' என்று கேட்டான் குமாரசாமி.
"அவசியமானா ஒரு ஆளை வரச் சொன்னாப் போச்சு" என்று சொல்லிவிட்டு, 'ஏய், காளி என்று அழைப்பைச் சுண்டிவிட்டான் கடைக்காரன். சோம்பல் முறித்து விசித்தெழுந்த காளியை ஏற இறங்கப் பார்த்தான் குமாரசாமி.
"காளி, சீக்கிரம் எழுந்திருப்பா, ஒரு கிராக்கி வந்திருக்கு பாக்கி தூக்கத்தைத் திரும்பவந்து மறந்துடாமல் துரங்கிக்கலாம், ஐயாவோடே சாலைவரை போகனும்" என்று மேலும் துரிதப்படுத்தினான் டீக் கடைக்காரன்.
கந்தலும் கிழிசலுமாகப் பார்க்கப் பரிதாபமாகத் தோற்றம் கொடுத்த காளிக்கும் ஒரு தேத்தண்ணீர் வாங்கிக் கொடுத்துப் புறப்பட்டான் குமாரசாமி.
அந்தி மங்கல் எங்கும் படர்ந்தது. சூரியனின் கதிர்கள் பொன் ரேக்குப் பெற்றுப் பிரகாசித்தன. இயற்கை கண்ணாமூச்சு விளையாடியது. -
முட்டையை இதம் பதமாகத் தோளில் சாய்த்துத் தலை