உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் -7・7

j ñ

ki

o, or

இது உங்க பிள்ளை என்கிறதுக்கு ருசு என்னா? ஆதாரம் என்னா?” என்று ஓங்காரமாகக் கேட்டாள் பிச்சைக்காரி.

$4 - * - ", sy - * 2 - - ί - or- .."

ராஜா என் தெய்வமே!" என்று அலறினாள் அந்தத் தாய்.

அடுத்த கணம்....!

தாய்ப்பால் பிரிட்டுப் பொங்கிச் சிதறி வழியத் தொடங்கி விட்டது!

மேனி புல்லரிக்க நின்ற சுசீலா, தன் தெய்வ மணிக்கரங்கள் இரண்டையும் குழந்தையை நோக்கி ஏந்தி விரித்தாள்.

தாவி ஓடி வந்த அந்தப் பிள்ளை, சுசீலாவின் மார்பகத்தைச் சரண் அடைந்தது. "அ.ம்...மா! அம்மா" -

"தாயே! உங்க மகன் தான் என் காளி" என்று தேம்பினாள் பிச்சைக்காரி.

“ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி இப்ப இருக்கக் கூடிய இதே கோலத்திலே பிறந்த மேனியாய் இந்தப் பிள்ளையை பட்டுக்கோட்டை நாடியம்மன் சந்நிதியிலே கண்டெடுத்தேன். என் பேச்சு சத்தியமுங்க! குழந்தையைக் கயவாடிக்கிட்டுப் போன எந்தப் பாவியோ, நகை நட்டுகளைக் கழற்றிக்கிட்டு, மனசு இரங்கி இதைக் கொல்லாமல் விட்டுப்புட்டுப் போயிக்க வேணும்!"என்றாள் அவள்.

"ராஜா தெய்வமே!"

ஆனந்தனே வந்து விட்டான். ராஜா திரும்பினான். "ப்...பா ப்.பா'என்று செருமினான். "ராஜா எங்க தெய்வமே இந்தாப் பாரு உன்னை"என்று தழுதழுக்கக் கூறிய ஆனந்தன், தன் கையிலிருந்த ராஜாவின் புகைப்படத்தைக் குழந்தையிடம் காட்டினான்.

ராஜா கைகொட்டிச் சிரித்தான். "தாயே, நான் புறப்படுறேனுங்க!" என்று விம்மினாள் பிச்சைக்காரி.