78 * பூவையின் சிறுகதைகள்
"தாயே, நீ எங்க கண்ணுக்குப் பிச்சைக்காரியாகவே என்று சொல்லி ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுக் கொத்தை நீட்டிக் கெஞ்சினாள் சுசீலா.
தோணலே!...இந்தா!
பிச்சைக்காரி நடு நடுங்கினாள். "தாயே, இந்தப் பிச்சைக்காரிக்கு இனி வேண்டியது சாண் வயிற்றுக்குப் பிடி சோறு மட்டுந்தான். அதைத்தான் அள்ளி அள்ளிக் கொடுத்துப்பிட்டீங்களே? பின்னே, எனக்கு எதுக்குங்க தாயே, பணமும் காசும்?... ஒண்ணும் வேண்டாம்! ஆனா, இந்த ஏழைக்கு ஒரேயொரு ஆசைதான் மனசிலே, தவிச்சுக்கிட்டு இருக்குது. இந்தப் படத்தை மட்டும் எனக்குக் கொடுத்துப்பிடுங்க. கோடிப் பொன்னைக் கொட்டிக் கொடுத்ததாட்டம் நினைக்சுக்கிடுவேனுங்க, தாயே!”கும்பிட்ட கைகளில் ஈரம் சொட்டியது.
அதோ, கைகளில் புகைப்படத்துடன், கண்களில் கண்ணிருடன் புறப்பட்டு விட்டாள். அந்தப் பிச்சைக்காரி!
"ராஜா..! எங்க தெய்வமே!...தாயே! வீரமாகாளித்தாயே!...”
ஆஹா,.வீரமாகாளி எவ்வளவு கருணையோடு சிரிக்கிறாள்!