'பிள்ளைக் கணியமுதே கண்னம்மா
பேசும் பொற்ச்த்திரமே! அள்ளி யணைத்திடவே - என்முன்னே
ஆடிவருந் தேனே'
ரேடியோவினின்றும் எழுந்து காற்றில் மிதந்துவந்த இனிய கானம் டாக்டர் சுந்தரத்தின் மனத்தில் இன்பவலை பின்னியது.
"கண்ணம்மா ஆம்; பேசும் பொற்சித்திரமேதான்! அன்று அமரகவியின் கனவில் தோன்றி மனத்தைப் பித்தாக்கினாள் அந்தக்
கண்ணம்மா. ஆனால் தற்சமயம் இழந்த இன்பத்திற்கு நிரவல் கொடுத்து வாழ்விலே அமுத கீதத்தைப் பொழிகின்றாள் இந்தக் கண்ணம்மா."
டாக்டரின் மனம் குதூகலத்தில் ஆழ்ந்திருந்தது. அவர் பார்வை எதிரே சென்றது. "கண்ணம்மா என்று அழைத்துக்கொண்டே எழுந்து நின்றார். தந்தையின் மனநிலையை அறிந்துகொண்டது போலக் கண்ணம்மா தன் சின்னஞ்சிறு வாயைத் திறந்து நயனங்களை உருட்டி விழித்தாள். அத்தருணம் டாக்டரின் தங்கை லலிதா குழந்தைக்கு அன்னம் பிசைந்து ஊட்டிக்கொண்டிருந்தாள்.
"அண்ணா, கண்ணம்மா வரவர அதிக சேட்டைபண்ண ஆரம்பிக்கிறாள். இந்த மாதிரி சிரித்துக்கொண்டு விளையாடும் சமயம் பார்த்துச் சாதம் ஊட்டினால்தான் கொஞ்சமேனும் சாப்பிடுகிறாள். மற்ற சமயங்களில் ஒரு பிடி அன்னம் கூடச் சாப்பிடமாட்டேன் என்கிறாள். தப்பித் தவறி அண்ணியின் போட்டோப் படத்தண்டை எடுத்துச் சென்றுவிட்டால் படத்தைப் பார்த்து விரலைக் காட்டி 'அம்மா எனக் கதற ஆரம்பிக்கிறாள்!"
"பாவம், தாயில்லாக் குழந்தை. இந்த ஒரு வருஷம் பட்டதெல்லாம் கஷ்டமில்லை. ஆனால் இனித்தான் நமக்கெல்லாம் சிரமம் காத்திருக்கிறது. இனிமேல்தான் தவழும் பருவம் அப்போது