உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

8

பூவையின் சிறுகதைகள்

பேணிக் காப்பதுதான் ரொம்பவும் சங்கடம். நீயும்கூட இன்னும் சில நாளில் சென்னை போய்விடுவாய். என்னமோ ஈசன் விட்டவழி,"

இவ்விதம் பேசிக்கொண்டிருந்த டாக்டர் தன் தங்கை லலிதாவின் முகத்தை நோக்கினார். அவர் முகத்தில் சஞ்சல ரேகைகள் தடம் பதிந்திருப்பதைக் கண்டதும் அவர் கண்கள் கலங்கின.

"லலிதா, குழந்தை துங்கி விழுகிறது. கொண்டு போய்ப் படுக்க வை" என்று சொல்லித் திரும்பவும் தன் அறைக்குச் சென்றார் சுந்தரம். அவரது கண்ணோட்டம் மேஜை மீது ஸ்டாண்டில் வைத்திருந்த புகைப்படத்தின் மீது லயித்தது. காஞ்சனா உயிருடனிருந்தபொழுது எடுத்த போட்டோ அது. அவளுயை மென்மலர் வதனத்தில் அன்புக்குழி மிளிரப் புன்முறுவல் பூத்தவண்ணம் சல்லாப மொழி பல பேசித் தன்னை ஊக்குவித்து வருவது போன்ற ஒரு பிரமை தட்டியது அவருக்கு

டாக்டரின் மனம் கடந்ததை நினைத்து வருந்த, எண்ணங்கள் அலையலையாய் மிதந்து கண்வழியே நீர்முத்துக்களைச் சிதறின.

丛钞、 ゞ効メ ఎఫీష ** メ 淑 ; ; j * :

<&*

கல்யாணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லும் படலத்தின் முதல் அத்தியாய ஆரம்ப தினம்!

காஞ்சனாவின் வீட்டில் மலர் மணம் எங்கும் பரவியிருந்தது. குழல் ஊதி விலைகள் செய்த மாயக்கண்ணனின் படம் ஒருபுறம்: மற்றொரு பக்கம் கால்மாறி நடம்புரிந்த நடராஜமூர்த்தியின் திருவுருவம் இரண்டிற்கும் நடுவில் அஹிம்சையின் திருஉரு தியாகத்தின் சின்னம் அமரவாழ்வெய்திய அண்ணல் காந்தி மகாத்மாகவின் மோகன பிம்பம்.தீபஒளியாகப் பரிணமித்தது.

அறையின் மத்தியில் வீற்றிருந்த சுந்தரத்தின் கவனம் நாற்புறமும் கழன்றோடி நிலைத்தது. -

சகலகலாவல்லி போலக் காட்சியளித்தாள் காஞ்சனா கையில் வீணையுடன், வீணையின் நரம்புகளை மெதுவாக மீட்டி ஜீவநாதத்தைத் தட்டி எழுப்பினாள். அவளது வீணாகாணத்தில் லயித்த அவர், அவளை நிமிர்ந்து நோக்கின சமயம், ஒருகணம் அவர் மனம் சஞ்சலித்துவிட்டது.

நாணிக் கண்புதைத்த வண்ணம் எழுந்து சென்றாள் பூத்துக் குலுங்கும் கொடி போன்ற அக்கட்டழகி. ஒய்யாரமான அவள் உருவத்தின் ஒவ்வொரு அங்க அமைப்பிலும் இளமை கொந்தளித்தது.