உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ുങ്ങഖ ബ്. ുpങ്കl് 89

அவளது முகச் சாயலிலே ஒருவிதக் கவர்ச்சி, அந்த வசீகரத்தில் ஒரு குளுமை! பிடியிலடங்கும் இடை கொடி மாதிரித் துவளும் மெல்லுடல். மெல்லிய கீற்றுப் போன்ற இதழ்களிலே முதுவல் ஊறும்போதெல்லாம் குழி விழும் ரோஜா நிறக் கன்னங்கள். நீண்ட புருவத்தின் கீழ இருட்கனலெனத் திகழும் விழிகள்:

அந்த அழகியின் வனப்பில் சுந்தரம் மயங்கியதில் ஆச்சரியமென்ன?

முகூர்த்தம் நிச்சயமாகித் திருமணமும் நடந்தேறியது.

சாயந்தரம் ஆனவுடன் 'காஞ்சனா என்று தேன்.குரலில் அழைத்துக்கொண்டே உள்ளே துழையும் சமயம் அவளும் தன் பதியின் வரவை எதிர்பார்த்து நின்று கொண்டிருப்பாள். வசந்தத்தின் வரவை எதிர்கொண்டழைக்கும் வானம்பாடியைப் போல. சுந்தரத்தின் இதயம் அப்படியே ஆனந்தப் பூரிப்பிலே ஒருமுறை சிலிர்த்து அடங்கிவிடும். இம்மாதிரி இனிய சந்தர்ப்பங்கள் எத்தனை எத்தனையோ

அன்று பிரசவ நாள். சுயஉணர்வுதப்பிவிட்டது காஞ்சனாவிற்கு. பிரவசம் சுகமாகத்தான் ஏற்பட்டது. ஆனால் டாக்டரை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டாள் அந்தக் காஞ்சனா:

தன் வாழ்வு அஸ்தமித்துவிட்டதென எண்ணிப் பொருமினார். ஆனால் அவ்விதம் நினைவு வரும் சமயமெல்லாம் அவருக்கு ஆறுதல் அளித்து வந்தது அவரது கண்ணம்மாதான்!

டாக்டர் சுந்தரத்திற்கு வேண்டிய உற்றார் உறவினர்கள். அவரை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்களது வார்த்தைகளுக்கெல்லாம் சிறிதும் மசியவில்லை டாக்டர். அதே சமயம், பச்சைக் குழந்தையின் பராமரிப்பிற்குப் பெண் உதவி மிகவும் அத்தியாவசியம் என்பதைத் தீர உணராமலுமில்லை.

"காஞ்சனா போல இனிமேல் இந்த ஜன்மத்திலா ஒரு மனவிை எனக்கு வாய்க்கப் போகிறாள்? இந்த ஒரு கேள்வியைத்தான் தன்னை நாடி வரும் பந்துக்களிடம் பிரயோகித்து வந்தார். காஞ்சனாவுடன் கழிந்து போன இன்பமயமான அந்நாட்களைத் திரும்பவும் எண்ணிப் பார்க்கும்போதெல்லாம் மறுமணத்தைப் பற்றிய நினைவே அவரது மனதில் தலைகாட்டாமலிருந்தது" át.