பக்கம்:பூ மணம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதினுன்கு : கலைந்த கனவும் சிதைந்த காதலும் ராஜேந்திரனுக்குக் கழிந்த சில நாட்களாகவே மல்வி காவைப் பற்றிய ஞாபகங்கள்தாம் அடிக்கடி வளையமிட்டுச் சுற்றின, அன்று தன் மனேவியுடன் நாடகத்துக்குப் புறப்பட்ட தருணம் ரிக்ஷாவில் குறுக்கிட்ட மல்லிகாவைப் பார்த்ததும், அதே கணம் நினைவிழந்து ராஜேந்திரன் தரையில் விழுந்து விட்டான். அவளது முகதரிசனம் அவனே அப்படிச் செய்து விட்டதுபோலும்! மதுரைக்குத் தான் வேலேக்கு வந்ததி லிருந்து அன்று வரை-ஏன், பூமாவுக்கும் அவனுக்கும் திருமணம் நடந்த அத்தனை மாதங்கள்வரை-ஒரு சமயம் கூட அவனுக்கு மல்லிகாவைப்பற்றிய நினேவே பிறக்க வில்லே. ஆகுல் கடந்த சில தினங்களாக அவனது மனக் கண்ணில் அதே மல்லிகா மலராத விளுடி கிடையாது. அவன் மனக்கண்ணில் எந்நேரமும் எப்பொழுதும் மல்லிகா மலர்ந்து நின்ருள் ; எங்கெங்கு நோக்கினும் அங்கங்கே மல்லிகாதான் நீக்கமற நிறைந்து காட்சி தந்தாள். அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/112&oldid=835333" இலிருந்து மீள்விக்கப்பட்டது