பக்கம்:பூ மணம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}8 ஏறக்குறைய அதே நிகழ்ச்சி. ராஜேந்திரனும் மல்லி காவும் காதல் கொண்டவிதம், பின் திருமணச் சமயத்தில், மல்லிகாவிற்கு அம்மை பூட்டவே காதலன் மனம் மாறுவது, ராஜேந்திரனுக்கு வேறு இடத்தில் மணம் நடப்பது, இதை அறிந்து மல்லிகா ஏங்கித் தவிப்பது, கடைசியில் மனம் விரக்தியடைந்த கதாநாயகி தற்கொலே செய்துகொள்வதுஇப்படி முடிந்திருந்தது கதை. கற்பனேக் கதை என்ருலும், அதே பெயர்களே வைத்து அப்படியே எழுதியிருப்பதைக் கண்ட ராஜேந்திரனுக்கு உடலெங்கணும் ஒருவகைத் திகில் பரவியது. கைதிக் கூண்டில் நிற்கும் குற்றவாளியைப்போல அவன் குமைந்து விடலானுன், கதையில் குறித்திருந்த கதாநாயகியின் முடிவைப் படித்ததும்.

  • உண்மையாகவே மல்லிகா தான் இதை எழுதியிருப் பாளா? தன் இதயக் குமுறலை வெளிக்காட்டி ஆறுதலடை யத்தான் இப்படிக் கதையை எழுதினுளா ? அல்லது நான் அவளே ஏமாற்றியதற்கு எனக்காக எழுதிய பாடமா இக்கதை? ஏமாற்றம் நானு செய்தேன் ? விதியின் விளை பாட்டல்லவா அது ! உண்மையிலேயே அவள் விரக்தி யடைந்து வாழ்வைப் போக்கிக்கொள்ளத்தான் முடி விட்டிருப்பாளோ? அவள் மனதை மாற்றமுடியாதா? எந்த முகத்துடன் அவனேப் பார்க்க முடியும்? ஐயோ... மல்லிகா...?

மனதிற்குள் தன்னே மறந்து புலம்பினன் ராஜேந்திரன்; அவன் உதடுகள் ஒட்டி விலகின. அச்சமயத்தில்தான் அந்த எதிர்பாராந நிகழ்ச்சி நடந்தது. ஆன்பரே?? ராஜேந்திரன் உயிரைக் கையில் பற்றியவாறு மெல்லத் திரும்பினுன். மல்லிகாவின் குரல் மாதிரி இருக்கிறதே ! மல்லிகாதான்...! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/114&oldid=835337" இலிருந்து மீள்விக்கப்பட்டது