பக்கம்:பூ மணம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

  • அன்பரே, ?

மேல்வி.கா.: 'மல்லிகா தான்; ஆம்; நானேதான். ‘அன்பரே” என்று அழைத்ததற்குத்தான இப்படி அதிசய விழி விழிக்கி lர்கள். ஐயா, நீங்கள்-நீர் என்னே வஞ்சித்துவிட்டீர் : என்மீது காதல்கொண்டது போன்று நீர் நடந்ததெல்லாம் வெறும் நடிப்புத்தான் என்பதை நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன்; எனக்கு அம்மை பூட்டியது ; முகம் கெட்டது. அழகில்லே என்று நீங்கள் மாறிவிட்டீர்கள். வேறு பெண் உங்கள் வசம் வந்துவிட்டாள். உங்கள் ஆமாவுக்கும் ஒருநாள் என்மாதிரி அம்மை பூட்ட நேர்ந்தால் என்ன செய்வீர்கள் ? உடனே அவளேயும் விட்டுவிட்டு, இன்ளுெருத்திக்காக வலைவீசி நிற்பீர்கள். இல்லையா ? வெளி அழகு ஒன்றுதான் உங்கள் இலக்கணமா ? மது வேண்டி மலருக்கு மலர் தாவித் திரியும் வண்டுதான நீங்கள் ? அது உங்களுக்கென்று எழுதிய வாசகமா ? என்னை நீங்கள் மணம் செய்துகொண்ட பிறகு இத்தகைய அம்மை எனக்குப் பூட்டியிருந்தால் என்ன செய்வீர்கள் ? என்ன வாழா வெட்டியாக்கியிருப்பீர்கள் ! ஆம். பழைய கதை எதற்கு? உங்கட்கு இதயம் என ஒன்று இருக்கு மானுல், அது உங்களேச் சும்மா விடாது. அபலே ஒருத்திகின் கண்ணிர்த்துளிகளின் அடிப்படையில் எழுந்திருக்கும் உங்கள் வாழ்வுபற்றிய தீர்ப்பை-முடிவைமட்டும் மறந்து விடாதீர்கள். முடிவு 1 ஆம் ; ஒரு கன்னியின் சாபம் கம்மா போகாது. வருகிறேன்.?? х நாடகங்களில் முக்கிய கட்டங்களில் பேசப்படுமே வசனங்கள், அவைபோலிருந்தன அவ்வார்த்தைகள். ട്രങ്ങഖ് ஒவ்வொன்றும் ராஜேந்திரனின் காதுகளில் ஒலித்தன. அவன் அலறியடித்துக் கொண்டு எழுந்தான். அவன் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது. இரவு மணி ஒன்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மணம்.pdf/115&oldid=835339" இலிருந்து மீள்விக்கப்பட்டது